என். ரவிகிரண்

‘சித்திரவீணை என். ரவிகிரண்’ என்றழைக்கப்படும் என். ரவிகிரண் (பிறப்பு: பிப்ரவரி 12, 1967) தென்னிந்தியாவின் மைசூரைச் சேர்ந்த சித்திரவீணை கலைஞர் ஆவார். பாடகர், பாடல் இயற்றுநர், இசை ஆசிரியர், இசை எழுத்தாளர் என கருநாடக இசைத் துறைகளில் பங்காற்றி வருகிறார் [1][2].

இசைப் பயிற்சி

[தொகு]

தந்தை சித்திரவீணை நரசிம்மனிடம் இசைப் பயிற்சிப் பெற்ற ரவிகிரண், தனது 5ஆவது வயதில் வாய்ப்பாட்டு கச்சேரி செய்தார். தனது 10 வயது வரை பாடகராக இருந்துவந்த ரவிகிரண், அதற்குப்பின், 21 தந்திகளைக் கொண்ட சித்திரவீணையை வாசிப்பதற்கு மாறினார். தனது 11ஆவது வயதில் சித்திரவீணை கச்சேரியை வழங்கினார்.

பிரபல இசைக் கலைஞர் டி. பிருந்தாவின் மாணவராக 10 ஆண்டுகள் இசை நுணுக்கங்களை ரவிகிரண் கற்றார்.

இசை வாழ்க்கை

[தொகு]

இந்தியாவிலும், உலக நாடுகள் பலவற்றிலும் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். செம்மங்குடி சீனிவாச ஐயர், டி. பிருந்தா, கிரிஜா தேவி, எம். பாலமுரளிகிருஷ்ணா, விஸ்வ மோகன் பட், என். ரமணி, ஆர். கே. ஸ்ரீகண்டன், நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, உ. ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை ரவிகிரண் நடத்தியுள்ளார்.

பெற்ற பட்டங்களும், சிறப்புகளும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தி இந்து, டிசம்பர் 19, 1999
  2. தி இந்து, ஜூலை 15, 2005
  3. "AWARDS - SANGITA KALANIDHI". மியூசிக் அகாதெமி. 23 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]