என் ராசாவின் மனசிலே | |
---|---|
இயக்கம் | கஸ்தூரி ராஜா |
தயாரிப்பு | ராஜ்கிரண் |
கதை | கஸ்தூரி ராஜா |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கிச்சாஸ் |
படத்தொகுப்பு | எல். கேசவன் |
கலையகம் | ரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ் |
விநியோகம் | ரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 13, 1991 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் ராசாவின் மனசிலே, கஸ்தூரி ராசாவின் இயக்கத்தில் 1991-ம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்கிரண், மீனா, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ராஜ்கிரண் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 13 ஏப்ரல் 1991 அன்று வெளியான இத்திரைப்படம் ஒரு வெள்ளி விழா திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார். தெலுங்கில் மொரத்தொடு நா மொகுடு என்ற பெயரில் வெளியான இத்திரைப்படத்தின் மறுவாக்கத்தில் ராஜசேகர், மீனா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3][4][5]
என் ராசாவின் மனசிலே | |
---|---|
இசையமைப்பாளர்
| |
வெளியீடு | 1991 |
ஒலிப்பதிவு | 1991 |
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
நீளம் | 27:35 |
இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா |
இத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 1991-இல் வெளியான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களை இளையராஜா, பொன்னடியான், உஷா, பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[6][7]
எண் | பாடல் | பாடியவர்(கள்) | கால அளவு |
---|---|---|---|
1 | 'குயில் பாட்டு' (மகிழ்ச்சி) | சுவர்ணலதா | 4:54 |
2 | 'குயில் பாட்டு' (சோகம்) | சுவர்ணலதா | 3:35 |
3 | 'பாரிஜாத பூவே' | எஸ். என். சுரேந்தர், சித்ரா | 5:00 |
4 | 'பெண் மனசு ஆழம் என்று' | இளையராஜா | 3:50 |
5 | 'போடா போடா புண்ணாக்கு' | கல்பனா, வடிவேலு, ராஜ்கிரண் | 5:43 |
6 | 'சோலை பசுங்கிளியே' | இளையராஜா | 4:33 |
1991 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது இரண்டாம் பரிசு
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)