என்னருகில் நீ இருந்தால்

என்னருகில் நீ இருந்தால்
தில் சே தில் தக்
வகைநாடகம்
காதல்
நகைச்சுவை
உருவாக்கம்ஷாஷி மிட்டல்
சுமித் ஹுகம்சந்த் மிட்டல்
எழுத்துஷாஷி மிட்டல்
சுமித் ஹுகம்சந்த் மிட்டல்
நடிப்பு
குரல்நடிப்புகுரலகம் ஸ்டுடியோ
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்1
அத்தியாயங்கள்345
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஷாஷி மிட்டல்
சுமித் ஹுகம்சந்த் மிட்டல்
படப்பிடிப்பு தளங்கள்குஜராத், இந்தியா
ஒளிப்பதிவுசுதேஷ் கோடியான்
தயாரிப்பு நிறுவனங்கள்ஷாஷி சுமித் ப்ரோடெக்ஷன்ஸ்
விநியோகம்வயாகாம் 18
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
படவடிவம்576i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்30 சனவரி 2017 (2017-01-30) –
1 சூன் 2018 (2018-06-01)
வெளியிணைப்புகள்
இணையதளம்

என்னருகில் நீ இருந்தால் என்பது பாலிமர் தொலைக்காட்சியில் சூலை 10, 2017 முதல் நவம்பர் 11, 2018 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான ஒரு மொழி மாற்றுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இது கலர்ஸ் தொலைக்காட்சியில் சனவரி 30, 2017 முதல் சூன் 1, 2018 வரை ஒளிபரப்பான 'தில் ஸே தில் தக்' என்ற இந்தி தொடரின் தமிழாக்கம் ஆகும்.

இத்தொடர் பரத்-ஷர்மிளா என்ற காதல் தம்பதியரின் வாழ்வில் தேனி என்ற பெண் வாடகைத்தாயாக நுழையும் போது ஏற்படும் விளைவுகளை மையமாகக் கொண்டது ஆகும்.

கதைச்சுருக்கம்

[தொகு]

பரத் என்பவன் பரத்வாஜ் என்னும் பாரம்பரியப் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் ஆவான். அவன் ஷர்மிளா என்ற ஏழைப்பெண்ணைக் காதலித்து தன் குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராக அவளை மணந்தும் கொண்டான். இதனால் பரத்தின் தாத்தா கோபமடைந்து அவர்கள் இருவரையும் வெறுக்க ஆரம்பித்தார்.

இரண்டு வருடங்கள் சென்றன. ஆனால் தாத்தாவின் கோபம் சற்றும் குறையவில்லை. மேலும் அவர் பரத்-ஷர்மிளா ஆகிய இருவரையும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து அமெரிக்கா சென்று நிரந்தரமாகத் தங்கிவிடும்படி கூறுகிறார். இதனால் அவர்கள் வருத்தமடைந்தனர். பிறகு ஷர்மிளா கர்ப்பமாக இருப்பதை அறிந்தவுடன் தாத்தா தன் மனதை மாற்றிக்கொண்டார். இதனால் பரத்-ஷர்மிளா தம்பதியினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் அவர்களின் மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்கவில்லை. ஒருநாள் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததால் ஷர்மிளாவின் கரு கலைந்து விடுகிறது. மேலும் அவர் கருப்பை பாதிக்கப்பட்டு விட்டதால் இனி அவர் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர் கூறிவிடுகிறார். ஆனால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று பரத்தின் அத்தை ஷில்பா அறிவுறுத்தினார். அதற்கு இருவரும் சம்மதித்தனர். மேலும் இந்த முடிவை குடும்பத்தினருக்குத் தெரியாமல் மறைத்து வந்தனர். இதனால் ஷர்மிளா கர்ப்பமாக இருப்பதாகவே அனைவரும் நினைத்து வந்தனர்.

பரத் டெனி என்ற ஏழைப்பெண்ணைப் பார்க்கிறான். அவள் அமெரிக்காவில் வாழ வேண்டும் என்ற கனவோடு இருப்பவள். அதற்கான பணத்தைத் தாம் தருவதாகக் கூறி பரத் அவளிடம் ஒப்பந்தம் செய்கிறான். இவ்வாறு பரத்-ஷர்மிளா தம்பதியின் குழந்தையைப் பணத்திற்காக வயிற்றில் சுமக்கும் வாடகைத்தாயாக மாறினார் டெனி.

ஷர்மிளாவின் தங்கை என்று பொய் கூறி டெனி பரத்வாஜ் வீட்டில் தங்குகிறார். அவரை பரத்-ஷர்மிளா தம்பதியினர் மிகுந்த அக்கறையோடு கவனித்துக் கொண்டனர். டெனியை ரோகிணி மற்றும் அவரது மகள் ஸ்ரீஜாவிற்குப் பிடிக்கவில்லை. இதனால் அவளை வீட்டை விட்டு துரத்த திட்டம் தீட்டினர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

அமெரிக்காவில் இருந்த பரத்தின் தம்பி அமர், பரத்வாஜ் வீட்டிற்கு வருகிறார். பிறகு டெனியைக் காதலிக்கவும் ஆரம்பிக்கிறார். ஆனால் டெனிக்கோ அவன் மீது காதல் வரவில்லை. இருப்பினும் அவனை மணந்து கொண்டால் தம் அமெரிக்கா கனவு எளிதில் நிறைவேறும் என்பதால் அவர் திருமணத்திற்கு சம்மதித்தார்.

டெனி தன்னை அறியாமல் பரத்தை காதலிக்கத் தொடங்கினார். இதை அறிந்த பரத் தம் நட்பிற்கு காதல் சாயம் பூச வேண்டாம் என்று டெனியிடம் அறிவுறுத்தினார். திருமணத்தின் போது ஹோமப் புகையால் டெனி மயக்கம் அடைந்தாள். அப்போது அங்கு இருந்த மருத்துவர் ஒருவர் அவரை சோதித்து விட்டு அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கூறுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு பரத் அனைவரின் முன்பும் டெனி வாடகைத்தாய் என்ற உண்மையைக் கூறிவிடுகிறார். இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தாத்தாவின் வேண்டுகோளை ஏற்ற அமர் டெனியுடன் தமக்கு இனி எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிவிட்டு அமெரிக்கா செல்கிறார். ஆனால் பரத்-ஷர்மிளா இருவரும் டெனியைக் கைவிட விரும்பவில்லை. இதனால் கோபமடைந்த பரத்தின் தாத்தா அவர்கள் மூவரையும் பரத்வாஜ் வீட்டை விட்டு உடனே வெளியேறுமாறு கூறுகிறார். மேலும் அவர்களுடன் பரத்வாஜ் குடும்பத்துடன் இனி எந்த உறவும் இல்லை என்றும் கூறுகிறார். இதனால் மூவரும் மிகுந்த கவலை அடைந்தனர். பிறகு டெனியின் யோசனைப்படி மூவரும் பரத்வாஜ் வீட்டை ஒட்டியுள்ள புற வீட்டில் தங்குகின்றனர்.

கதாபாத்திரங்கள்

[தொகு]

முக்கியக் கதாபாத்திரங்கள்

[தொகு]

துணை கதாபாத்திரங்கள்

[தொகு]
  • தேஜ் சப்ரு- புருஷோத்தமன் பரத்வாஜ் (பரத்தின் தாத்தா)
  • டோலி மின்ஹாஸ்- அம்பிகா புருஷோத்தமன் பரத்வாஜ் (பரத்தின் பாட்டி)
  • குனல் வெர்மா- அமர் (பரத்தின் நண்பன்)
  • சச்சின் பாரிக்- ராம்நாத் பரத்வாஜ் (பரத்தின் தந்தை)
  • வைஷ்ணவி மஹந்த்- இந்து ராம்நாத் பரத்வாஜ் (பரத்தின் தாய்)
  • கவுரி அகர்வால்- ஜானகி பரத்வாஜ் (இந்துவின் மகள்)
  • ஊர்வசி உபத்யய்- ரோகிணி பரத்வாஜ் (இந்துவின் அக்கா)
  • ஹிமானி ஷர்மா- ஸ்ரீஜா பரத்வாஜ் (ரோகிணியின் மகள்)
  • கரண் கோத்வானி- சுகு பரத்வாஜ் (ரோகிணியின் மகன்)
  • பூஜா சிங்- பூரணி சுகு பரத்வாஜ் (சுகுவின் மனைவி)
  • க்யாதி கேஷ்வானி- டாக்டர் ஷில்பா குமார் (இந்துவின் மகள்)
  • ஜிக்னேஷ் ஜோஷி- டாக்டர் பரத்குமார் (ஷில்பாவின் கணவர்)
  • மயங்க் அரோரா- ரஞ்சித் (ஜானகியின் வருங்கால கணவர்)

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]

கலர்ஸ் கோல்டன் பெடல் விருதுகள்

[தொகு]
ஆண்டு விருது பெற்றவர் முடிவு
2017 பிடித்த ஜோடி சித்தார்த் சுக்லா-ரஷமி தேசாய் வெற்றி
2017 சிறந்த திறமையான நடிப்பு ஜாஸ்மின் பாசின் வெற்றி
2017 சிறந்த ஒளிப்பதிவாளர் சுனில் கோடியான் வெற்றி

மறுஒளிபரப்பு

[தொகு]

இது திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 12 மணிக்கு மறுஒளிபரப்பும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு வார தொகுப்பாகவும் ஒளிபரப்பானது.

வெளி இணைப்புகள்

[தொகு]