என்னுடைய தோட்டத்தில் மேரே அங்க்னே மேன் | |
---|---|
வகை | குடுப்பம் |
உருவாக்கம் | ஸ்பியர் ஒரிஜின்ஸ் |
எழுத்து | கதை வினோத் ரங்கநாத் திரைக்கதை ஷில்பா சௌபே சுஷில் சௌபே பங்கஜ் மவ்ச்சி வசனம் வினோத் தரனி |
இயக்கம் | பார்த்தோ மித்ரா |
படைப்பு இயக்குனர் | ஷிக்கா விஜ் |
பின்னணி இசை | லலித் சென் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி மொழிமாற்றம் தமிழ் |
அத்தியாயங்கள் | இந்தி : 770 தமிழ் : 50+ |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | சுஞ்சோய் வத்வா கோமல் சுஞ்சோய் வத்வா |
படப்பிடிப்பு தளங்கள் | மும்பை |
தொகுப்பு | ஜனக் சவுஹான் ஃபிரோஸ் கான் அனில் வி. |
ஓட்டம் | தோராயமாக 20 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | ஸ்பியர் ஒரிஜின்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஸ்டார் பிளஸ் (இந்தி) விஜய் தொலைக்காட்சி விஜய் சூப்பர் (தமிழ்) |
படவடிவம் | 576i HDTV 1080i |
ஒளிபரப்பான காலம் | 15 சூன் 2015 5 ஆகத்து 2017 | –
என்னுடைய தோட்டத்தில் என்பது விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பான நெடுந்தொடர் ஆகும். சாந்தி வாசுதேவ் என்ற வயதான பெண்மணி தனது குடும்பத்தை தனக்கே உரிய பாணியில் கட்டுக்கோப்புடன் கையாளுகிறார். பிறகு அவர் வீட்டிற்கு புதிதாக வரும் மருமகள் ரியா, அவர் விதித்த கட்டுப்பாடுகளில் இருந்து முரண்படுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி இத்தொடர் அமைந்துள்ளது.
இது இந்தி தொடரான 'மேரே அங்க்னே மேன்' என்ற தொடரின் தமிழ் மொழிமாற்று தொடர் ஆகும், ஸ்டார் பிளஸ் என்ற தொலைக்காட்சியில் சூன் 15, 2015 முதல் ஆகத்து 5, 2017 வரை ஒளிபரப்பாகி 770 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[1][2][3][4][5][6]
சாந்தி வாசுதேவ் என்பவருக்கு ரகு மற்றும் சரளா என இரு பிள்ளைகளும் ஆறு பேரப் பிள்ளைகளும் இருந்தனர். அவர் தன் மகள் சரளா மற்றும் அவளது மூன்று பிள்ளைகள் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். ஆனால் சரளாவோ அதை பயன்படுத்திக் கொண்டு சாந்தியிடம் பணத்தை சுரண்டுகிறார்.
ரியா என்ற பெண் தன்னுடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஷிவா என்பவரை காதலித்தாள். ஷிவாவும் அவளை காதலித்தான். ஆனால் தன் பாரம்பரிய குடும்பத்தில் ரியா மருமகளாக அனுசரித்து வாழ முடியாது என்று ஷிவா நினைத்தான். இதற்கிடையில் சரளா தன் மகன் அமித்திற்கு ரியாவுடன் சம்பந்தம் பேசுகிறார். சரளாவின் மகன் ஷிவா என்று தவறாக புரிந்துகொள்ளும் ரியா அந்த திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.
ஒருநாள் ரியா காதலிப்பது ஷிவாவைத்தான் என்று அறியும் சரளா அதிர்ச்சி அடைகிறார். பிறகு ஒரு திட்டம் போடுகிறார். அதன்படி அவள் தன் அம்மா சாந்தியிடம் அமித்-ரியா திருமணத்தை 4 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று அவசரப்படுத்துகிறார். அதற்கு சாந்தியும் சம்மதிக்கிறார்.
வருடம் | விருது | பகுப்பு | தேர்வு | முடிவு |
---|---|---|---|---|
2016 | ஸ்டார் பரிவார் விருதுகள் | பிடித்த மாமனார் | வருண் பதோலா | வெற்றி |
பிடித்த மாமியார் | க்ருத்திகா தேசாய் கான் | |||
பிடித்த நகைச்சுவை முகம்(பெண்) | ||||
பிடித்த புதுமுகம் - பெண் | எக்தா கவுல் | பரிந்துரை | ||
பிடித்த புதுமுகம்- ஆண் | கரம் ராஜ்பல் | |||
பிடித்த நகைசச்சுவை முகம்- பெண் | அனன்யா கரே | |||
பிடித்த மாமியார் | சுசிதா த்ரிவேதி | |||
பிடித்த நகைச்சுவை முகம்(ஆண்) | வருண் பதோலா | |||
2017 | ஸ்டார் பரிவார் விருதுகள் | பிடித்த மாமியார் | க்ருத்திகா தேசாய் கான் | வெற்றி |
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)