எம். எச். ஏ. ஹலீம் | |
---|---|
எம். எச். ஏ. ஹலீம் | |
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2000–2010 | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 29, 1956 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வேலை | அரசியல்வாதி, வங்கி அதிகாரி |
இனம் | இலங்கைச் சோனகர் |
எம். எச். ஏ. ஹலீம் (M. H. A. Haleem, பிறப்பு: ஆகத்து 29, 1956)[1], இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 111,011 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[2][3][4][5][6]
16/2 பவுசியா கார்டன், மாவில்மடைவீதி, கண்டியில் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்,