எம். என். கோவிந்தன் நாயர் M. N. Govindan Nair | |
---|---|
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் | |
பதவியில் 1977–1979 | |
முன்னையவர் | வே. கி. கிருஷ்ண மேனன் |
பின்னவர் | நீலலோகிதாசன் நாடார் |
போக்குவரத்து & மின்சாரத் துறை அமைச்சகம் | |
பதவியில் 25 செப்டம்பர் 1971 – 25 மார்ச் 1977 | |
முன்னையவர் | கே. எம். ஜியார்ஜ் |
பின்னவர் | பி. கே. வாசுதேவன் நாயர் |
வேளாண்மை & மின்சாரத் துறை அமைச்சகம் | |
பதவியில் 6 மார்ச் 1967 – 21 அக்டோபர் 1969 | |
முன்னையவர் | ஏ. பி. பௌலோசு |
பின்னவர் | ஓ. கோரன் |
கேரள சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1970–1977 | |
முன்னையவர் | டி. டி. போட்டி |
பின்னவர் | ஈ. சந்திரசேகரன் நாயர் |
தொகுதி | சடையமங்கலம்சடையமங்கலம் |
பதவியில் 1967–1970 | |
முன்னையவர் | கே. கிருஷ்ணன் பிள்ளை |
பின்னவர் | கே. கிருஷ்ணன் பிள்ளை |
தொகுதி | புனலூர் |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 1962–1967 | |
தொகுதி | கேரளம் |
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கேரள மாநில பொதுச் செயலாளர். | |
பதவியில் 1970–1971 | |
முன்னையவர் | எஸ். குமரன் |
பின்னவர் | என். இ. பலராம் |
பதவியில் 1956–1959 | |
முன்னையவர் | செ. அச்சுத மேனன் |
பின்னவர் | ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு |
திருவாங்கூர் கொச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் | |
பதவியில் 1952–1954 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பந்தளம், இந்தியா | 10 திசம்பர் 1910
இறப்பு | 27 நவம்பர் 1984 | (அகவை 73)
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
துணைவர் | தேவகி |
பிள்ளைகள் | 1 மகன், 1 மகள் |
மூலம்: [1] |
எம். என். கோவிந்தன் நாயர் (M. N. Govindan Nair) (10 டிசம்பர் 1910-27 நவம்பர் 1984) பிரபலமாக எம். என் என்று அழைக்கப்படும் இவர் இந்தியாவின் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பந்தளம் என்ற இடத்தில் பிறந்த பொதுவுடைமை அரசியல்வாதி ஆவார். இவர் “கேரளாவின் குருசேவ்” என்று அழைக்கப்படுகிறார்.
எம். என். அந்த பகுதியில் நடைபெற்ற சாதி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார். தனது ஆரம்ப நாட்களில் நாயர் சமூகச் சங்கத்துடனும் தொடர்பிலிருந்தார்.
எம். என். கோவிந்தன் நாயர், சேவா கிராமம் சென்று ஜவகர்லால் நேரு உட்பட பல தேசியத் தலைவர்களைச் சந்தித்து தனது அரசியல் வாழ்க்கையில் ஊக்கத்தை பெற்றார். கேரளாவில் பொதுவுடமை இயக்கத்தில் சேர்ந்த இவர் பின்னர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த நாயர், இவரது பணிக்காலத்தின் கீழ் கேரளாவில் 1957இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கட்சி ஆட்சிக்கு வந்தது. நம்பூதிரிப்பாடு முதல் முதல்வரானார். 1964இல் கட்சி பிரிந்தபோது கோவிந்தன் நாயர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியிலேயே இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் கேரளாவின் அமைச்சராகவும் பணியாற்றினார். 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் புனலூர் தொகுதியிலிருந்து கேரள சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1971ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் சடையமங்கலம் தொகுதியிலிருந்து மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 அக்டோபர் 4 முதல் 1977 மார்ச் 25 வரை செ. அச்சுத மேனன் அரசாங்கத்தில் நான்காவது கேரள சட்டபேரவையில் விவசாயம், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் வீட்டுவசதி போன்ற துறைகளுக்கு பொறுப்பு வகித்தார்.
கேரளாவில் பல தீவிரமான மற்றும் முற்போக்கான கொள்கைகள் மற்றும் சட்டங்களை இயற்றுவதில் நாயர் முக்கிய பங்கு வகித்தார்.
1972 ஆம் ஆண்டில் வீடில்லாதவர்களுக்கு வீட்டுவசதி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘இலட்சம் வீடு’ என்ற வீட்டுத் திட்டத்தைத் தொடங்குவதற்கு எம். என் பொறுப்பாக இருந்தார். இவரை கௌரவிக்கும் வகையில், இந்த திட்டம் இப்போது இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.[1]
ஐக்கிய முன்னணி அரசின் ஒரு பகுதியாக இருந்தபோது, கேரள தனியார் காடு (உடை மற்றும் ஒதுக்கீடு) சட்டம், 1971, மலபார் பிராந்தியத்தில் உள்ள தனியார் காடுகளை தேசியமயமாக்கியது. 1969 கேரள நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தச் சட்டம்) போன்ற சட்டங்களை இவர் முன்வைத்தார்.[2]