எம். எஸ். கோபாலகிருஷ்ணன் | |
---|---|
![]() 1960களில் எம். எஸ். கோபாலகிருஷ்ணன் | |
பிறப்பு | மைலாப்பூர் | 10 சூன் 1931
இறப்பு | சனவரி 3, 2013 சென்னை | (அகவை 81)
அறியப்படுவது | கருநாடக வயலின் இசைக்கலைஞர் |
உறவினர்கள் | எம். நர்மதா (மகள்) |
விருதுகள் | பத்ம பூசன், பத்மசிறீ, கலைமாமணி, சங்கீத நாடக அகாதமி விருது, சங்கீத கலாநிதி |
எம். எஸ். கோபாலகிருஷ்ணன் , (M. S. Gopalakrishnan, பரவலாக MSG, 10 சூன் 1931 - 3 சனவரி 2013), கர்நாடக இசையில் தேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவர் பத்மசிறீ, கலைமாமணி, சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் சங்கீத கலாநிதி போன்ற விருதுகளைப் பெற்றவர். 2012ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசு பத்ம பூசன் விருது[1] வழங்கியது.
கோபாலகிருஷ்ணன், சென்னை, மயிலாப்பூரில் சூன் 10,1931 அன்று பிறந்தார். கருநாடக இசை மற்றும் இந்துத்தானி இசையை தமது தந்தையார் பேராசிரியர். பரவூர் சுந்தரம் ஐயரிடம் பயின்றார். இவர் தந்தை 1910-ல் வட இந்தியாவில் வயலினை அறிமுகம் செய்தவர். கோபாலகிருஷ்ணன் தனது 8 வது அகவையிலேயே இசை கச்சேரிகளில் பங்கேற்கத் தொடங்கினார். அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், ஆலத்தூர் சகோதரர்கள், பல்லடம் சஞ்சீவ ராவ் என அந்தக் காலத்தின் முன்னணிப் பாடகர்கள் பலருக்கும் வயலின் வாசித்தார். வாய்ப்பாட்டு இசைக்கச்சேரிகளில் பக்க வாத்தியமாக மட்டுமில்லாமல், தனி வயலின் கச்சேரியாக ஐம்பதாண்டுகள் நடத்தினார். ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, தென்னாபிரிக்கா மலேசியா, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு இசைப்பயணம் சென்றார்.
இவரது மகளான முனைவர் எம். நர்மதா வயலின் இசைக்கலைஞர் ஆவார்.
ஆண்டு விருது
2013 சனவரி 3 அன்று, இந்திய நேரப்படி அதிகாலை 2 மணிக்கு சென்னையிலுள்ள ஒரு மருத்துவமனையில் தனது 82ஆவது வயதில் கோபாலகிருஷ்ணன் காலமானார்.[3]
'வேலைக்குப் போகாதே' கட்டுரை, எழுதியவர்:ரிஷிகேஷ்; வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2011 - 2012)