எம். எஸ். தௌஃபீக் M. S. Thowfeek நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
உள்நாட்டுப் போக்குவரத்துத்துறை பிரதி அமைச்சர் | |
பதவியில் 21 சனவரி 2015 – 17 ஆகத்து 2015 | |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | திருகோணமலை மாவட்டம் |
பதவியில் சனவரி 2016 – மார்ச் 2020 | |
முன்னையவர் | ஏ. ஆர். ஏ. அபீசு |
தொகுதி | தேசியப் பட்டியல் |
பதவியில் 2010 – ஆகத்து 2015 | |
தொகுதி | திருகோணமலை மாவட்டம் |
பதவியில் 2001–2004 | |
தொகுதி | தேசியப் பட்டியல் |
பதவியில் 2000–2001 | |
தொகுதி | திருகோணமலை மாவட்டம் |
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 2008–2010 | |
பின்னவர் | ஏ. ஆர். முகமது |
தொகுதி | திருகோணமலை மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முகமது சரீப் தௌபீக் 7 சனவரி 1971 |
அரசியல் கட்சி | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சக்தி |
முகம்மது சரிப் தௌஃபீக் (Mohamed Shariff Thowfeek, பிறப்பு: 7 சனவரி 1971)[1] இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை அமைச்சரும் ஆவார்.
தௌஃபீக் 2000 நாடாளுமன்றத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு சார்பில் மக்கள் கூட்டணி வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2] முஸ்லிம் காங்கிரசு கட்சிக்கும் மக்கள் கூட்டணிக்குமிடையேயான கூட்டு ஒப்பந்தம் 2001 சூன் மாதத்தில் முறிவடைந்தது. 2001 அக்டோபரில் முசுலிம் காங்கிரசு எதிர்க்கட்சிக் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தது.[3][4][5][6] தௌஃபீக் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[7] ஆனாலும், இவர் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[8][9] 2004 தேர்தலில் முசுலிம் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு கட்சிப் பட்டியலில் மூன்றாவதாக வந்து, தெரிவு செய்யப்படவில்லை.[10]
பின்னர், தௌஃபீக் 2008 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.[11] மீண்டும் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[12] இவர் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் 2015 சனவரியில் உள்ளூர் போக்குவரத்து பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[13][14][15]
2015 நாடாளுமன்றத் தேர்தலில் தௌஃபீக் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக திருகோணமலையில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[16][17] ஆனாலும், 2016 சனவரியில் முசுலிம் காங்கிரசு உறுப்பினர் ஏ. ஏர். ஏ. ஹபீசு தனது தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியைத் துறந்ததை அடுத்து தௌஃபீக் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[18][19][20] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் முசுலிம் காங்கிரசு சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[21][22]
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2000 நாடாளுமன்றம் | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | மக்கள் கூட்டணி | 15,588 | தெரிவு | ||
2001 நாடாளுமன்றம் | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய தேசிய முன்னணி | தெரிவு செய்யப்படவில்லை | |||
2004 நாடாளுமன்றம் | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 21,465 | தெரிவு செய்யப்படவில்லை | |||
2008 மாகாணசபை | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய தேசிய முன்னணி | தெரிவு | |||
2010 நாடாளுமன்றம் | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய தேசிய முன்னணி | 23,588 | தெரிவு | ||
2015 நாடாளுமன்றம் | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய தேசிய முன்னணி | தெரிவு செய்யப்படவில்லை | |||
2020 நாடாளுமன்றம்[23] | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய மக்கள் சக்தி | 43,759 | தெரிவு |