எம். எஸ். நாகராஜ ராவ்

எம். எஸ். நாகராஜ ராவ் (Mirle Srinivasa Nagaraja Rao) (3 சூன் 1932 – 24 டிசம்பர் 2011) தொல்லியல் ஆய்வாளரும், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1984 முதல் 1987-ஆம் ஆண்டு முடிய பணியாற்றியவர்.

கர்நாடகா மாநிலத்தின் மண்டியா நகரத்தில் 1932-இல் பிறந்த நாகராஜ ராவ் புனே பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர் கர்நாடகா மாநில தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவில் பணியில் சேர்ந்தார். 1957-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் உதவித் தொல்லியல் ஆய்வாளராக சேர்ந்து எம். என். தேஷ்பாண்டே தலைமையில் தொல்லியல் துறை கூடுதல் பயிற்சி பெற்றார். இவர் கர்நாடாகா மாநிலத்தில் ஹம்பி தொல்லியல் களத்தை 1979 முதல் 1988-ஆம் ஆண்டு முடிய அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
முன்னர் தலைமை இயக்குநர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1984-1987
பின்னர்