எம். சந்திரன் | |
---|---|
എം. ചന്ദ്രൻ | |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2006–2016 | |
தொகுதி | ஆலத்தூர், பாலக்காடு மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அணக்கரா (பாலக்காடு), மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 15 சூலை 1946
இறப்பு | 1 மே 2023 எர்ணாகுளம், கேரளம், இந்தியா | (அகவை 76)
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | கே. கோமளவள்ளி |
வாழிடம் | அணக்கரா (பாலக்காடு), கேரளா, இந்தியா |
எம். சந்திரன் (M. Chandran) ( மலையாளம் : எம். சந்திரன்; 15 சூலை 1946 - 1 மே 2023) கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆலத்தூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு முறை கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
சந்திரன் முதன்முதலில் மாணவராக இருந்தபோதே அரசியலில் நுழைந்தார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக இருந்தார், 2006 மற்றும் 2016 க்கு இடையில் ஆலத்தூரை பிரதிநிதித்துவப்படுத்தி சட்டமன்றத்தில் இரண்டு முறை பணியாற்றினார்.
சந்திரன் கேரளாவின் எர்ணாகுளத்தில் 1 மே 2023 அன்று தனது 76வது வயதில் காலமானார் [1]