எம். ஜி. ஸ்ரீகுமார்

எம். ஜி. ஸ்ரீகுமார்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்எம். ஜி. ஸ்ரீகுமார்
பிறப்பு25 மே 1957 (1957-05-25) (அகவை 67)
ஹரிப்பாடு, கேரளம், இந்தியா
தொழில்(கள்)பின்னணிப் பாடகர், வங்கி ஊழியர், இசை இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர்
இசைத்துறையில்1983முதல் தற்போது வரை
இணையதளம்mgsreekumar.com

எம்.ஜி. ஸ்ரீகுமார் (M. G. Sreekumar), (பிறப்பு: மே 25, 1958) மலையாள படவுலகில்,இரண்டு முறை தேசிய விருது பெற்ற இந்திய பின்னணிப் பாடகர் மற்றும் இசை இயக்குனர் ஆவார். 44 ஆண்டுகளாக பாடி வரும் இவர்,[1][2] மலையாளம் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடியுள்ளார். இவர், இசையமைப்பாளர் எம்.ஜி. ராதாகிருஷ்ணன் மற்றும் பாடகி கே. ஓமனகுட்டி ஆகியோரின் இளைய சகோதரர் ஆவார். இவர், கே.எம்.ஜி மியூசிக்ஸ் என்ற இசை நிறுவனத்தையும், மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புராவில் சரிகம என்கிற பெயரில் இசைப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.

சுயசரிதை

[தொகு]

எம்.ஜி. ஸ்ரீகுமார், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் , ஹரிபாத், என்னும் இடத்தில், மே 25, 1957 ம் ஆண்டு இசையமைப்பாளர் மற்றும் ஹார்மோனிஸ்ட் மலபார் கோபாலன் நாயர் மற்றும் ஹரிகதா சொல்பவரான கமலாச்சி அம்மா ஆகியோருக்கு இளைய மகனாகப் பிறந்தார். ஸ்ரீகுமார், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் , திருவனந்தபுரத்தில் , ஒரு பாடகராகத் தனது தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு பணிபுரிந்தார். அவரது சகோதரர் எம்.ஜி. ராதாகிருஷ்ணனுடன் கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது மூத்த சகோதரர், மறைந்த எம்.ஜி. ராதாகிருஷ்ணன் , விருது பெற்ற இசை இயக்குநராகவும், கர்நாடக இசைக்கலைஞராகவும் இருந்தார் . அவரது மூத்த சகோதரி கே. ஓமனகுட்டி , ஒரு பாரம்பரிய இசை பாடகராகவும் மற்றும் கேரளா இசை அகாதமியில் முதல்வராகவும் இருந்தார். பின்னணிப் பாடகர் கே.எஸ். ஹரிசங்கர் இவரது மருமகன் ஆவார்.

அசோக் குமார் இயக்கிய 'கூலி' (1983) திரைப்படத்தில் ஸ்ரீகுமார் அறிமுகமானார். மோகன்லால் நடித்த பிரியதர்சனால் இயக்கப்பட்ட சித்ரம் (1988), மலையாளப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் இவர் பாடியுள்ளார். மேலும், இவர் மலையாளம் , தமிழ் , ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் 3,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.[3]

சதுரங்கம் (2002) மற்றும் தாண்டவம் (2002) போன்ற மலையாள படங்களில் அவர் இசை இயக்குனராகப் பணியாற்றினார். ஸ்ரீகுமாரின் சமீபத்திய திரைப்படங்கள் வரிசையில் இசை இயக்குனராக பிரியதர்ஷனின் காஞ்சிவரம் (2008), மோகன்லாலின்அலெக்ஸாண்டர் தி கிரேட் மற்றும் ஒரு நாள் வரும் போன்றவை அடங்கும். ஸ்ரீகுமாரின் குரல் மோகன்லால், திலீப் மற்றும் ஜெயராம் ஆகியோருக்காக மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டில் அவர் ராகசாகரம் காணொளி இசைத் தொகுப்பில் பாடினார். மலையாளத்தில் அய்யப்ப பக்தி பாடல்களை எஸ். குமார் என்ற பெயரில் எழுதினார். [ சான்று தேவை ] ஏஷ்யாநெட் தொலைக்காட்சியில் சரிகம என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும், ரியாலிட்டி நிகழ்ச்சியான ஐடியா ஸ்டார் சிங்கருக்கு நீதிபதியாகவும் இருந்தார். 2012 ல், ஸ்ரீகுமார் அர்த்தநாரி திரைப்படத்திற்கு தயாரிப்பாளராக இருந்தார். இப்படத்தை முதலில், சந்தோஷ் சௌபர்ணிகா இயக்கியிருந்தார். மற்றும் இதன் இரண்டாவது பாகம் சுவாமிநாதன் இயக்கத்தில் பணி நடந்து வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nagarajan, Saraswathy (24 June 2005). "'Singing from the soul'". தி இந்து. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/singing-from-the-soul/article28583960.ece. 
  2. "The night that changed life of MG Sreekumar". Kerala Kaumudi. 20 January 2019.
  3. www.mgsreekumar.com பரணிடப்பட்டது 20 செப்டெம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

[தொகு]