எம்.ஜி.எம். டிஸ்ஸி வேல்ட் (MGM Dizzee World) என்பது தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு பொழுதுபோக்குப் பூங்கா ஆகும். இது கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. பூங்காவில் புனைக்கால்வாய், பெர்ரிஸ் சக்கரம், சிலந்தி ஸ்பின், ரோலர் கோஸ்டர், வேடிக்கை மலை, இடி கார்கள், சூப்பர் ட்ரூப்பர் போன்றவையும், நீர் விளையாட்டு உலகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் பருவகால சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. [1]
இது எம்.ஜி.எம். குழுமத்தைச் சேர்ந்தது ஆகும்.[2][3]
இந்தப் பூங்கா 2000 களின் துவக்கத்தில் பனி பள்ளத்தாக்கு அனுபவம் போன்ற சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை அறிமுகப் படுத்தியது. மேலும் பனி மூடிய மலை, ஒரு பனி மனிதன், செயற்கைப் பனி மழை போன்றவையும் உள்ளன.[4]