2017 ஆசிய தடகள போட்டி வெண்கலப் பதக்கத்துடன் சாபீர் | |||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழு பெயர் | சாபீர் மதாரி பில்யலில்[1] | ||||||||||||||||
பிறப்பு | 8 சூன் 1996 மஞ்சேரி,கேரளம், இந்தியா | ||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | ||||||||||||||||
நிகழ்வு(கள்) | 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி, 400 மீட்டர்கள் | ||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | |||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 400 மீ தடை தாண்டல் ஓட்டம்: 49.13 (தோகா 2019) 400 மீட்டர்: 46.96 (மிலாதா போலெசுலாவ் 2019) | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||||||||
27 செப்டம்பர் 2019 இற்றைப்படுத்தியது. |
சாபீர் மதாரி பில்யலில் (Jabir Madari Pillyalil) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். 400 மீ ஓட்டப் பந்தயம், 400 மீ தடை தாண்டல் ஒட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுகளில் இவர் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்று விளையாடி வருகிறார். 2020 டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட இவர் தகுதி பெற்றுள்ளார். [2] 400 மீ தடை தாண்டல் ஒட்டப் பந்தயத்திற்கு தகுதி பெற்றுள்ள முதலாவது இந்திய ஆண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் 400 மீ தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 50.22 விநாடிகளில் பந்தயத் தொலைவைக் கடந்து சாபீர் வெண்கலப் பதக்கம் வென்றார். [3] 2019 ஆம் ஆண்டு தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் 400 மீ தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 49.13 விநாடிகளில் பந்தயத் தொலைவைக் கடந்து சாபிர் வெண்கலப் பதக்கம் வென்றார். [4] இவ்வெற்றியின் மூலம் 2019 ஆம் ஆண்டு உலக தடகள வெற்றியாளர் போட்டிக்கு சாபீர் தகுதி பெற்றார். [5] சாபீர் இந்திய கடற்படையில் பணிபுரிகிறார். 2017 ஆம் ஆண்டு சாபீர் கேரள மாநிலத்திலுள்ள கொச்சியில் பணியமர்த்தப்பட்டார். [6]