எயர்லங்கா பறப்பு 512

எயர் லங்கா பறப்பு UL512
4R-ULD
நிகழ்வு சுருக்கம்
நாள்3 மே 1986
சுருக்கம்குண்டுத் தாக்குதல்
இடம்பண்டாரநாயக்கா
பன்னாட்டு வானூர்தி நிலையம்
பயணிகள்128
ஊழியர்20
காயமுற்றோர்41
உயிரிழப்புகள்21
தப்பியவர்கள்129
வானூர்தி வகைலாக்ஹீடு L-1011-385 டிரைஸ்டார்
வானூர்தி பெயர்கொழும்பு நகரம்
இயக்கம்எயர் லங்கா
வானூர்தி பதிவு4R-ULD
பறப்பு புறப்பாடுகாத்விக் வானூர்தி நிலையம், இலண்டன்
 ஐக்கிய இராச்சியம்
நிறுத்தம்சூரிக் வானூர்தி நிலையம், சூரிக்
 சுவிட்சர்லாந்து
2வது நிறுத்தம்துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம், துபாய்
 ஐக்கிய அரபு அமீரகம்
கடைசி நிறுத்தம்கட்டுநாயக்கா, கொழும்பு
 இலங்கை
சேருமிடம்மாலே பன்னாட்டு வானூர்தி நிலையம், மாலே
 மாலைத்தீவுகள்

எயர்லங்கா பறப்பு 512 (Air Lanka Flight 512) இலண்டன் காத்விக் வானூர்தி நிலையத்திலிருந்து கிளம்பி சூரிக் , துபாய் வழியாக 1986 மே 3 அன்று கொழும்பு பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் வந்தடைந்த ஓர் எயர் லங்கா லோக்ஹீடு L-1011 டிரைஸ்டார் இரக வானூர்தி இறுதிக் கட்டமாக இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத்தீவுகளுக்குப் புறப்படும் முன்னர் குண்டு வெடிப்பால் இரண்டாகப் பிளந்த நிகழ்வாகும்.[1] இந்தப் பறப்பில் பெரும்பாலும் பிரெஞ்சு, மேற்கு செருமானிய, பிரித்தானிய, சப்பானியப் பயணிகள் பயணித்திருந்தனர். இந்நிகழ்வில் 13 வெளிநாட்டவர் உள்ளிட 21 பேர் உயிரிழந்தனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர் [2] இறந்த வெளிநாட்டவர்களில் இருவர் பிரித்தானியர், 3 பிரெஞ்சு, 2 சப்பானியர், ஒரு மாலத்தீவு, மற்றும் ஒரு பாக்கித்தானியும் ஆவார்.

வெடித்த குண்டு மாலத்தீவுகளுக்கு கொண்டுசெல்லவிருந்த இறைச்சி மற்றும் காய்கறி சரக்குப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்க் குழுவினருக்கும் இலங்கை அரசினருக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களுக்கு தடங்கல் விளைவிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தக் குண்டை வைத்திருக்கலாம் இலங்கை அரசு தெரிவித்தது.[2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]