எரி குழாய் என்பது, ஆய்வுகூடங்களில் பயன்படும் சிறிய குழாய் வடிவக் கொள்கலம் ஆகும். இது சோதனைக் குழாய், கொதி குழாய் என்பவற்றை தோற்றத்தில் ஒத்திருக்கும். ஆனால் அளவில் இவை இரண்டிலும் பார்க்க சிறியவை. இதன் மேற்பகுதி திறந்தும், அடிப்பகுதி பெரும்பாலும் வளைவானதாகவும் இருக்கும். திறந்த மேற்பகுதி பொதுவாக வெளிப்புறம் வளைந்த விளிம்பு கொண்டதாக இருக்கும். இவ்வமைப்பு உள்ளேயிருக்கும் நீர்மங்களைப் பாதுகாப்பாக வேறு கலங்களில் ஊற்றுவதற்கு வசதியானது.
மிகச்சிறிய பொருட்களை உயர்வெப்பநிலைக்கு வெப்பமேற்றவேண்டிய தேவைகளுக்குப் பயன்படும்.