எரிக் வில்லியம் வோல்ஃப் (Eric William Wolff; பிறப்பு: சூன் 5, 1957) என்பவர் பிரித்தானிய காலநிலை ஆய்வாளர், பனிப்பாறை நிபுணர் மற்றும் ஒரு கல்வியாளர் ஆவார். ராயல் கழகத்தின் உறுப்பினரான வோல்ஃப் 2013 ஆம் ஆண்டு முதல் அக்கழகத்தின் புவி அறிவியல் பிரிவின் ஆய்வியல் பேராசிரியராக கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். [1][2]
2009 ஆம் ஆண்டு இவருக்கு ஐரோப்பிய புவி அறிவியல் ஒன்றியம் சார்பாக லூயிசு அகாசிசு பதக்கம் வழங்கப்பட்டது. பூமியிலோ அல்லது சூரிய மண்டலத்தின் பிற இடத்திலோ உள்ள தாழ்வெப்ப மண்டல ஆய்வுக்கு ஒரு நபரின் சிறந்த விஞ்ஞான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த பதக்கம் வழங்கப்படுகிறது. [3] 2010 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் அறிவியலுக்கான மிகவும் மூத்த கற்றறிந்த சமுதாயம் என கருதப்படும் ராயல் கழகத்தின் உறுப்பினராக வோல்ஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] 2012 ஆம் ஆண்டு இலண்டனின் புவியியல் சங்கம் இவருக்கு லைல் பதக்கத்தை வழங்கியது. [5]