தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | சென்னை, இந்தியா | 23 பெப்ரவரி 1925
இறப்பு | 10 செப்டம்பர் 2011 பெங்களூர், இந்தியா | (அகவை 86)
துணைவர்(கள்) | சரோ பிரபாகர் |
விளையாட்டு | |
விளையாட்டு | தடகளம் |
நிகழ்வு(கள்) | 100 மீட்டர் |
கல்லூரி அணி | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
எரிக்கு பிரபாகர் (Eric Prabhakar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த இவர் 100 மீ ஓட்டப்பந்தயங்களில் இந்தியாவின் சார்பாக இவர் விளையாடினார். 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீட்டர் போட்டியில் பங்கேற்று காலிறுதிக்கு வந்தார். [1] ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் உரோட்சு நிதியுதவி பெற்று முதுகலைப் பட்டம் படித்த அறிஞராகவும் இவர் அறியப்படுகிறார். பர்மா- ஆயில் நிறுவனம் மற்றும் யுனெசுகோ நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்தார், மேலும் இந்தியாவில் ஒரு தீவிர விளையாட்டு நிர்வாகியாகவும் இருந்தார்.[2]
எரிக்கு பிரபாகர் 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதியன்று , விளையாட்டு மற்றும் கல்வித் துறையில் சாதனைகளுக்காக குறிப்பிடப்பட்ட ஒரு குடும்பத்தில் இவர் பிறந்தார். அவரது சகோதரர், ஈ.சி.பி பிரபாகர், துடுப்பாட்டம், வளைதடி பந்தாட்டம் மற்றும் தென்னிசு போட்டி ஆகியவற்றில் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். உயர் தரமதிப்பீடு பெற்ற ஓர் அதிகாரியாகவும் இருந்தார்.[3]
சரோ என்ற பெண்ணை எரிக் பிரபாகர் மணந்தார். தம்பதியருக்கு தேவ், சதி மற்றும் ஜெய் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.
பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பிறகு, எரிக்கு பிரபாகர் இந்திய நிர்வாக சேவையில் நுழைவதற்கான வாய்ப்பைப் பெற்றார். [3]
ஆண்டு | போட்டி | இடம் | நிலை | நிகழ்வு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
இந்தியாவிற்காக பங்கேற்கிறார் ![]() | |||||
1948 | 1948 கோடைகால ஒலிம்பிக்கு | இங்கிலாந்து, இலண்டன் | 6 ஆவது, கியூ எப் 4 | 100 மீட்டர் | ஆண்கள் தடகளம் 100 மீட்டர் |