எருமைப் புல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | Poales
|
குடும்பம்: | Poaceae
|
பேரினம்: | Brachiaria
|
இனம்: | B. mutica
|
இருசொற் பெயரீடு | |
Brachiaria mutica Peter Forsskål Otto Stapf |
எருமைப் புல்லின் (ஆங்கிலம்:Buffalo grass) தாவரவியல் பெயர் 'பிரக்கையிரியா மியூட்டிகா' (இலத்தீன்:Brachiaria mutica) மற்றொரு பெயர், நீர்ப்புல் என்பதாகும். இப்புல்லினம், பல பருவப்பயிர் ஆகும். இது பள்ளத்தாக்குக்களில் உள்ள சதுப்பு நிலங்களில் இயல்பாகக் காணப்படுகிறது. இது காட்டுவகைப் புல் இனமாகும். ஒரு மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது.[2] இந்தப்புல் இருபாலினத் தன்மையை உடையதாகும். இதன் தாயகம் பண்டைய ஆப்பிரிக்க கண்டமெனக் கண்டறிந்துள்ளனர். இதன் பேரினமானது, நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்களைக்[3][4] கொண்டு, பெரிய புல் பேரினமாக விளங்குகிறது.
கொஞ்சகாலமாகத் தீவனப்பயிராக, தமிழ்நாட்டில் பயிர் செய்கின்றனர். கோயம்புத்தூர், கோவில்பட்டி வேளாண்பண்ணை, இறைவைப் புன்செய்களில் பயிர் செய்து பார்த்ததில், எருமைப்புல் சமவெளிகளிலும் செழிப்பாக வளருமென்பது கண்டறியப்பட்டது. ஆண்டுக்கு 8-10 முறை அறுவடைச் செய்யலாம். மொத்தத்தில் ஏக்கர் ஒன்றுக்கு, 80,000 இராத்தல் வரை புல் மகசூல் கிடைக்கிறது. புல்லில் புரதச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. மாடுகள், இப்புல்லை விருப்பத்துடன் விரும்பி உண்கின்றன. கெனியா, நேப்பியர் புல்களின் தாவரத்தண்டுகளைக் கழிப்பது போல், இந்நீர்ப்புல்லைக் கழிப்பதில்லை. ஏனெனில், இத்தண்டு குறைவாகவும், மெல்லியதாகவும் இருப்பதே, இதற்குக் காரணமெனக் கண்டறியப்பட்டுள்ளது.இலைகள் மிகுந்து காணப்படுகின்றன. காலையில் எருமைப்புல்லின் மேலிருக்கும் பனித்துளிகள் காய்ந்தபின் அறுத்தால்தான், மாடுகள் தின்கின்றன என்பதை, நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டிய குறிப்பாகும்.
{{cite web}}
: Invalid |ref=harv
(help)