சர் எர்பர்ட் கோப் சிலி ( Sir Herbert Hope Risley ) (4 ஜனவரி 1851- 30 செப்டம்பர் 1911) ஒரு பிரித்தானிய இனவியலாளரும் மற்றும் காலனித்துவ நிர்வாகியுமாவார்.[1][2] இந்தியக் குடிமைப் பணி அதிகாரியான இவர், வங்காள மாகாணத்தின் பழங்குடியினர் மற்றும் சாதிகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்.[3] 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பிரித்தானிய இந்தியாவின் முழு இந்து மக்களுக்கும் சாதி அமைப்பை முறையாகப் பயன்படுத்தியதற்காக இவர் குறிப்பிடத்தக்கவர்.[4][5] விஞ்ஞான இனவெறியை வெளிப்படுத்துபவராக, இந்தியர்களை ஏழு இனங்களாகப் பிரிக்க மானுடவியல் தரவுகளைப் பயன்படுத்தினார்.[6] [7]
ரிசிலி 1851 இல் இங்கிலாந்தின் பக்கிங்காசையரில் பிறந்தார். இந்தியக் குடிமைப் பணியில் சேருவதற்கு முன்பு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள நியூ கல்லூரியில் பயின்றார். ஆரம்பத்தில் வங்காளத்தில் பணியமர்த்தப்பட்டார்.[1] அங்கு இவரது தொழில்முறை கடமைகள் இவரை புள்ளியியல் மற்றும் இனவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது. மேலும் விரைவிலேயே மானுடவியலில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.[8]}} பின்னர் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார். 1911 இல் தான் இறப்பதற்கு சற்று காலம் முன்பு, இலண்டனில் உள்ள இந்திய அலுவலகத்தில் நிரந்தர செயலாளராகச் சேர்ந்தார். இடைப்பட்ட ஆண்டுகளில் , விஞ்ஞான இனவெறி என்று இப்போது கருதப்படும் கருத்துகளின் அடிப்படையில் இந்திய சமூகங்களின் பல்வேறு ஆய்வுகளைத் தொகுத்தார். இவர் களப்பணி மற்றும் மானுடவியல் ஆய்வுகளின் மதிப்பை வலியுறுத்தினார். வரலாற்று ரீதியாக இந்தியவியலாளர்களின் வழிமுறையாக இருந்த பழைய நூல்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை நம்பியிருப்பதற்கு மாறாக இது இவரது வாழ்நாளில் குறிப்பிடத்தக்க அணுகுமுறையாக இருந்தது.
வீரத்திருத்தகை விருது வழங்கி கௌரவித்த இவரது நாடு இவரை அரச கழகத்தின் மானுடவியல் நிறுவனத்தின் தலைவராகவும் பனியமர்த்தியது.