எலக்ட்ரானிக் சிட்டி

மின்னணு நகரம், பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் ஆனைக்கல் தாலுக்காவில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ள இது பல முன்னோடி தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போசிஸ்,விப்ரோ, டிசிஎஸ், ஹச்சிஎல், டெக்மஹேந்திரா, பைகான் போன்றவற்றின் தலைமையிடமாக அமைந்துள்ளது.[1][2][3]

அமைவிடம்

[தொகு]

இது தேசிய நெடுஞ்சாலை 47'க்கு ஒரு புறத்தில் 322 ஏக்கருக்கும் அதிகமான இடத்தில் அமைந்துள்ளது.

சிறப்பு

[தொகு]

இது தகவற்தொழிற்நுட்ப நிறுவனங்களுக்காக 1990-களில் துவங்கப்பட்டதாகும். இது ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழிற்நுட்பப் பூங்கா ஆகும்.

நிர்வாகம்

[தொகு]

இது கர்நாடக ஏலேக்ட்ரோநிக்சால் (காநிக்ஸ்) நடத்தப்பட்டு வருகிறது.

நிறுவனங்கள்

[தொகு]

உலகின் முன்னணி தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் தங்களது கிளைகளை இங்கு அமைத்துள்ளன. அவை:

  1. பாரத மிகு மின் நிறுவனம்
  2. பயோக்கான்
  3. சி-டாட்
  4. ஜெனரல் எலக்ட்ரிக்
  5. எச். சி. எல். டெக்னாலஜிஸ்
  6. ஹெவ்லட்-பேக்கர்ட்
  7. இன்ஃபோசிஸ்
  8. சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட்.
  9. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்
  10. விப்ரோ

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About Electronic City". Archived from the original on 23 July 2018. Retrieved 22 July 2018.
  2. "Panchayat Portal". panchamitra.kar.nic.in. Archived from the original on 22 August 2018. Retrieved 2021-04-02.
  3. "Infrastructure of Electronic City". Keonics. Archived from the original on 2011-07-21. Retrieved 2011-02-11.