எலன் இலைன்சு

எலன் இலைன்சு (Helen Lines) (இறப்பு: 2001) ஓர் அமெரிக்கப் பயில்நிலை வானியலாளர் ஆவார். தொடக்கத்தில் இவர் வான் ஒளிப்படவியலாளராகவும் ஆழ்விண்வெளி நோக்கீட்டாளராகவும் இருந்தார். இவர் பீனிக்சு வானியல் கழகத்தின் தொடக்கநிலை உறுப்பினர்களில் ஒருவராவார். இவர் அமெரிக்க மாறு விண்மீன் நோக்கீட்டாளர் கழகத்தின் உறுப்பினரும் ஆவார். இவரும் இவரது கணவராகிய இரிச்சர்டு டி. இலைன்சும் அரிசோனாவில் அமைந்த மேயரில் ஒரு சிறிய வான்காணகத்தை நிறுவினர். இவர் 1992 இல் மாறும் விண்மீன்களின் ஒளியளவியல் பணிக்காகப் பசிபிக் வானியல் கழகத்தின் பயில்நிலை வானியலாளர் சாதனை விருதை பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
முன்னர்
ஆட்டோ கிப்பெசு
Amateur Achievement Award of Astronomical Society of the Pacific ( Richard D. Lines உடன் இணைந்து)
1992
பின்னர்
டேவிட் எச். இலெவி