தனித் தகவல் |
---|
பிறப்பு | 14 மார்ச்சு 1977 (1977-03-14) (அகவை 47) கேரளம், இந்தியா |
---|
விளையாடுமிடம் | இலக்குக் காவலர் |
---|
மூத்தவர் காலம் |
---|
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) |
---|
| இந்தியன் இரயில்வே | | |
---|
தேசிய அணி |
---|
1992-2006 | இந்தியா | | |
---|
|
---|
எலன் மேரி இன்னசெண்ட்டு (Helen Mary Innocent) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட வீராங்கனையாவார். 1977 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். வளைகோல் பந்தாட்ட அணியில் இலக்கு காவலராக எலன் விளையாடுகிறார். செருமனிக்கு எதிரான போட்டித் தொடரில் 1992 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக பன்னாட்டுப் போட்டிகளில் எலன் அறிமுகமானார்.[1][2] 2003 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த ஆப்பிரிக்க-ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கான பட்டத்தை வெல்ல இறுதி சமன் முறிவு முயற்சியில் இரண்டு தண்ட அடிகளைத் தடுத்து எலன் காப்பாற்றினார். எலன் மேரிக்கு இந்திய அரசாங்கம் அருச்சுனா விருதை வழங்கி சிறப்பித்தது.[3]
பன்னாட்டு மூத்தோர் போட்டிகள்
[தொகு]
- 1996 – இந்திரா காந்தி தங்கக் கோப்பை, புது தில்லி
- 1997 – 1997 பெண்கள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று, அராரே (4ஆவது)
- 1998 – 1998 பெண்கள் உலகக்கோப்பை, உட்ரெக்ட்டு (12ஆவது)
- 1998 – 1998 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள், கோலாலம்பூர் (4ஆவது)
- 1998 – 1998 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,பாங்காக்கு (2ஆவது)
- 1999 – ஆசியக் கோப்பை, புது தில்லி (2ஆவது)
- 2000 – 2000 பெண்கள் ஒலிம்பிக் தகுதிச் சுற்று, மில்டன் கெயின்சு (10ஆவது)
- 2001 – 2001 பெண்கள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று, அமியன்சு/அப்வில்லே (7ஆவது)
- 2002 – 2002 பெண்கள் வெற்றியாளர் போட்டி, யோகன்னசுபர்க்கு (3ஆவது)
- 2002 – 2002 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள், மான்செசுட்டர் (1ஆவது)
- 2002 – 2002 ஆசியக் கோப்பை, பூசன் (4ஆவது)
- 2003 – ஆப்ரோ-ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஐதராபாத்து (1ஆவது)
- 2004 – ஆசியக் கிண்ணம், புது தில்லி (1ஆவது)
- 2006 – 2006 பொதுநலவாய விளையாட்டுக்கள்,மெல்போர்ன் (2ஆவது)
- 2006 – 2006 பெண்கள் உலகக்கோப்பை, மாட்ரிட்டு (11ஆவது)