எலிசபெத் தர்ட்டில் Elizabeth Turtle | |
---|---|
பிறப்பு | 1967 (அகவை 57–58)[1] |
துறை | கோள் அறிவியல் |
பணியிடங்கள் | ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழக பயன்முறை இயற்பியல் ஆய்வகம் அரிசோனா பல்கலைக்கழகம் கோள் அறிவியல் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் ( அறிவியல் இளவல்.) அரிசோனா பல்கலைக்கழகம் (முனைவர்) |
ஆய்வேடு | பெருமொத்தல் குழிப்பள்ளங்களின் சிறுகூறு முரைப் படிம்ம் உருவாக்கல்: விரிதெபோர்ட் கட்டமைப்பு உருவளவின் விளைவும் பல்வலயக் குழிப்பள்ளங்களின் உருவாக்கம் |
ஆய்வு நெறியாளர் | எச். ஜாய் மெலோழ்சு |
எலிசபெத் தர்ட்டில் (Elizabeth Turtle) ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தின் பயன்முறை இயற்பியல் ஆய்வகத்தில் பணிபுரியும் ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார்.
இவர் 1989 இல் இயற்பியலுக்கான அறிவியல் இளவல் பட்டத்தை மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஈட்டினார். இவர் கோள் அறிவியலில் முனைவர் பட்டத்தை 1998 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார்.[2]
முனைவர் பட்டம் பெற்றதும் இவர் அப்பல்கலைக்கழகக் கோள் அறிவியல் துறையிலும் மேலும் ஐசோனா, த்சுக்கானில் உள்ள கோள் அறிவியல் நிறுவனத்திலும் பணிபுரிந்தார். இவர் 2006 இல் பால்டிமோர், மேரிலாந்தில் உள்ள ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தின் பயன்முறை இயற்பியல் ஆய்வகத்தில் சேர்ந்தார்.[2]
இவர் கலீலியோ விண்கலத் திட்டத்தின் படிம்வாக்கக் குழுவில் இணைந்து பணிபுரிந்துள்ளார்[3] இவர் காசினி-ஐகன்சு திட்டத்தின் படிமவாக்க, இராடார் குழுக்களில் இணைந்து பணிபுரிந்துள்ளார்.[4] இவர் நிலா வெள்ளோட்ட வட்டணைக்கலத்தில் இயங்கிய ஒளிப்படக் கருவிப் பணியின் இணை ஆய்வாளர் ஆவார்.[5] இவர் கோள்மொத்தல் கூறுபாடுகள் பற்றியும் கோள் மேற்பரப்பு நிகழ்வுகள் பற்றியும் கோள் படிமவாக்கம், நிலப்பட வரைவியல் பற்றியும் பல ஆய்வுக் கட்டுரைகளை பிறரோடு இணைந்து வெளியிட்டுள்ளார்.
இவர் ஐரோப்பா படிமவாக்க கருவி அமைப்பின் முதன்மை ஆய்வாளர் ஆவார். இக்கருவி அமைப்பு வியாழன் நிலவான ஐரோப்பாத் தேட்ட த் திட்ட வட்டணைக்கலத்தில் இணைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.[6] இவர் திரேகான்பிளை விண்கலத்தின் முதன்மை ஆய்வாளரும் ஆவார்.[7] இந்த விண்வெளிக்கலத் திட்ட முன்மொழிவு நாசாவின் 2017 ஆம் ஆண்டு புதிய முன்முகப்புத் தேட்ட நிகழ்ச்சிநிரலில் உள்ளடங்கியதாகும். இது 2019 ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று தேர்வாகியது.[8] இத்திட்ட வட்டணைக்கலம் தித்தன் நிலாவின் வளிமண்டல வானிலையையும் அதன் மேற்பரப்பு வேதி உட்கூறுகளையும் ஆய்வதற்கான இருப்பிடம் மாற்றவல்ல இரட்டை வான்கல ஊர்தியைக் கொண்டதாகும்.[8]
இவர் பல பத்து ஆய்வுக் கட்டுரைகளின் முதன்மை ஆசிரியர் ஆவார். இவர் மேலும் பற்பல அறிவியல் கட்டுரைகளை பிறரோடு இணைந்தும் வெளியிட்டுள்ளார்.[9]
நாசா 2008, 2009, 2010, 2015 ஆம் ஆண்டுகளில் இவருக்குபல குழுச் சாதனை விருதுகளை வழங்கியுள்ளது. இவ்விருதுகளைப் பெற வழிவகுத்த குழுக்களாக காசினி தித்தன் தொகுப்பு அறிவியல் குழு, காசினி படிம உருவாக்க அறிவியல் குழு, காசினி தித்தன் வட்டணைக்கல அறிவியல் குழு நிலா வெள்ளோட்ட வட்டணைக்கலக் குழு, நிலா வெள்ளோட்ட வட்டணைக்கலக் விரிவாக்க அறிவியல் திட்டக் குழு போன்றவை அமைந்தன.[10]