எலிசபெத் வில்லிங் பவல் | |
---|---|
மத்தியூ பிராட் வரைந்த எலிசபெத் வில்லிங் பவல்லின் ஓவியம், அண். 1793 | |
பிறப்பு | எலிசபெத் வில்லிங் பெப்ரவரி 21, 1743 பிலடெல்பியா, பென்சில்வேனியா, ஆங்கில அமெரிக்கா |
இறப்பு | சனவரி 17, 1830 பிலடெல்பியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா. | (அகவை 86)
கல்லறை | கிறிஸ்து சர்ச் கல்லறை |
வாழ்க்கைத் துணை | |
உறவினர்கள் |
|
கையொப்பம் |
எலிசபெத் வில்லிங் பவல் (பிப்ரவரி 21, 1743 - ஜனவரி 17, 1830) அமெரிக்க முக்கியஸ்தர் மற்றும் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-அம நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிலடெல்பியா உயர் வகுப்பை சேர்ந்த பிரபலர் ஆவார். பிலடெல்பியாவின் மேயர்களின் மகள் மற்றும் மனைவியான இவர், அமெரிக்க அரசியல் விருந்தோம்பலின் முக்கிய அங்கமான பல கூட்டங்களை அமைத்தார். 1774-ஆம் ஆண்டின் முதல் கண்ட காங்கிரஸ் சமயத்தில் அதில் பங்கேற்க வந்தவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்திற்கும் தனது வீட்டில் இடம் தந்து, இரவு விருந்துகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை அமைத்தும் தந்தார். அமெரிக்க விடுதலை போர்க்கு பின்னர் பிலடெல்பியாவின் முக்கியஸ்தர் ஆனார், மற்றும் முன்னோடி சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல் புள்ளிகளின் குடியரசு அவையை ஏற்படுத்தினார்.[1][2][3]
அந்த காலத்தின் அரசியல் தலைவர்களுடன் நன்கு பழகினார் பவல். ஜார்ஜ் வாஷிங்டனின் நெருங்கிய நண்பரான இவர், அவரை இரண்டாவது முறை அதிபராக வலியுறுத்தியவர்களில் ஒருவராவார். அரசியல், பெண்களின் பங்கு, மருத்துவம், கல்வி மற்றும் தத்துவம் போன்ற பல தலைப்புகளில் வெகுவாக எழுதி வந்தார். பெஞ்சமின் ப்ரான்க்ளினிடம் "நமக்கு எது கிட்டியது, குடியரசா அல்லது மன்னராட்சியா?" என்ற இவரின் கேள்விக்கு "ஒரு குடியரசு... அதனை நீங்கள் காத்து வந்தால்"[a] என்ற ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பை பற்றி மிகவும் கோடிட்டப்பட்டுள்ள பதிலையும் பெற்றார். இந்த பேச்சினை அரசியலமைப்பு அவையின் பிரதிநிதி ஜேம்ஸ் மக்ஹென்றி என்பவரால் 18 செப்டம்பர் 1787 அன்று அவரது நாட்குறிப்பில் பதிவு செய்தார். பிராங்க்ளினுடன் பவல் ஆற்றிய பேச்சு காலப்போக்கில் மாறிப்போனது, இருபதாம் நூற்றாண்டுகளில் பவல்க்கு பதிலாக அனாமதேய பெண்மணி அல்லது குடிமகன் என்று மாறிப்போனது. பவல் இல்லத்தில் நடந்த இந்த உரையாடலும், சுதந்திர அரங்கின் படிகள் என மாறியது.