எலிபாசு பிளாடிசெபாலசு

எலிபாசு பிளாடிசெபாலசு
புதைப்படிவ காலம்:சிபானியன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
புரோபோசிடே
குடும்பம்:
பேரினம்:
எலிபாசு
இனம்:
எ. பிளாடிசெபாலசு
வேறு பெயர்கள்

பிளாடிசெபாசு பிளாடிசெபாலசு

எலிபாசு பிளாடிசெபாலசு (Elephas platycephalus) என்பது ஆசிய யானைகளுடன் நெருங்கிய தொடர்புடைய பெரிய தாவர உண்ணி வகையினைச் சேர்ந்த பாலூட்டிகளின் அழிந்துபோன சிற்றினமாகும். இது 130,000 மற்றும் 700,000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிளீசுடோசீன் சகாப்தத்தில் வாழ்ந்தது.[1] இதனுடைய புதைபடிவங்கள் சிவாலிக் மலைகளின் மேல்பகுதிகளில் கிடைத்துள்ளன.[2]

வகைப்பாட்டியல்

[தொகு]

கட்டுரையாளரும் ஆராய்ச்சியாளருமான வின்சென்ட் மாக்லியோ மற்றொரு சிற்றினமான மம்முதாசு மெரிடியோனலிசு (ஒத்த இனம் எலிபாசு பிளானிப்ரான்சு), எ. பிளாட்டிசெபாலசின் நேரடி மூதாதையர் எனச் சந்தேகம் கொள்கிறார். ஏனெனில் இரண்டு சிற்றினங்களும் ஒரே மாதிரியாகத் தோற்றமுடையன. இருப்பினும், மண்டை ஓட்டின் முன்பக்க-இணைப்பு பகுதி மற்றும் இரண்டு சிற்றினங்களின் மேல் கடைவாய்ப்பற்கள் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இரண்டு சிற்றினங்களும் வேறுபடுகின்றன என்று முடிவு செய்யப்பட்டது. [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Paul S. Martin, Richard G. Klein (1989). Quaternary Extinctions: A Prehistoric Revolution. University of Arizona Press. p. 91. ISBN 9780816511006.
  2. Xiaoming Wang (2013). Fossil Mammals of Asia: Neogene Biostratigraphy and Chronology. Columbia University Press. p. 433. ISBN 9780231520829.
  3. Avinash Nanda (2002). Skull characteristics of two proboscideans from the Upper Siwalik Subgroup of Nepal. Neues Jahrbuch fur Geologie und Palaontologie - Abhandlungen. பக். 22.