எலியோகார்பசு வெனுசுடசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. venustus
|
இருசொற் பெயரீடு | |
Elaeocarpus venustus Beddome |
எலியோகார்பசு வெனுசுடசு(Elaeocarpus venustus) என்பது எலியோகார்பேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது இந்தியாவின் தென்னிந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகிறது. வாழ்விட இழப்பால் இத்தாவரம், அச்சுறுத்தப்படுவதால், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால், மிக அருகிய இனமாக வகைப்படுத்தியுள்ளது.[1]
சதுப்பு நிலப்பரப்பை தன் வாழ்விடங்களாகக் கொண்ட இந்த எலியோகார்பசு வெனுசுடசு செங்குத்தான வேர்களைக் கொண்ட நடுத்தர அளவிலான மரமாகும்.
எலியோகார்பசு வெனுசுடசு அகத்தியமலை உயிர்க்கோள காப்பகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் சிமுஞ்சி, முத்துகுழிவாயல், மேல் கொடையார் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.[2]
இம்மரமானது, மலைப்பாங்கான நன்னீர் சதுப்பு நிலங்களில் உள்ள மலை நீரோடைகள் நிறைந்த பசுமையான மழைக்காடுகளில் 1,200 முதல் 1,300 மீட்டர் உயரத்தில் மட்டுமே வளர்கிறது.
மக்கள் தொகை பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருந்தாலும், நீர்மின் அணைகள், சாலை கட்டுமானம் மற்றும் தேயிலைத்தோட்டங்கள், காபி மற்றும் யூகலிப்டஸ் தோட்டங்களின் விரிவாக்கம் ஆகியவற்றிற்காக காடுகளை அழிப்பதன் மூலம் ஏற்படும் வாழ்விட இழப்பு காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.