எல்.கே.ஜி | |
---|---|
இயக்கம் | கே.ஆ.பரபு |
தயாரிப்பு | அந்தோணி |
இசை | லியோன் ஜேம்ஸ் |
நடிப்பு | ஆர். ஜே. பாலாஜி ப்ரியா ஆனந்த் |
வெளியீடு | 22 பெப்ரவரி 2019 |
நாடு | இந்தியா |
எல். கே. ஜி (L.K.G) ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ஆர். ஜே. பாலாஜி, ப்ரியா ஆனந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 22 பெப்ரவரி 2019 அன்று திரைக்கு வந்தது. இத்திரைப்படத்தை லியோன் ஜேம்ஸ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நாஞ்சில் சம்பத், ஆர். கே. ரித்திஷ், மயில்சாமி ஆகியோரும் நடித்துள்ளனர். லால்குடி கருப்பையா காந்தி என்பதன் சுருக்கமே எல். கே. ஜி என்பதாகக் கூறப்படுகிறது. திரைப்படம் முழுவதும் சமகால அரசியல் சூழலை பகடி செய்யும் விதத்தில் அமைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகைச்சுவைத் திரைப்படமாகவும் வந்துள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
லால்குடியில் கவுன்சிலராக இருக்கும் ஆர். ஜே. பாலாஜி தன் அரசியல் வாழ்வு அத்தோடு நின்று விடாமல், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், முதலமைச்சர் என்று வர வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காகத் தனது தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு வாக்கினையும் பெறுவதற்காக முயற்சி செய்கிறார். தமிழக முதல்வர் அந்நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த நேரத்தில் அரசியல்வாதிகளை வியாபார ரீதியாக உயர்த்தும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறி ஒரு தனியார் நிறுவனத்தின் முகவராக பிரியா ஆனந்த் ஆர். ஜே. பாலாஜியோடு இணைகிறார். பிரியா ஆனந்தின் உதவியால் இந்தியா முழுக்க அறிந்த நபராக பாலாஜி மாறுகிறார். ஒரு கட்டத்தில் முதல்வர் இறந்த பின்னர் இடைத்தேர்தல் வாய்ப்பு ஆர். ஜே. பாலாஜிக்கு வர அதே கட்சியில் பெரிய அரசியல்வாதியாக இருக்கும் ஜே. கே. ரித்திஷ் பாலாஜிக்குப் போட்டியாக வருகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே திரைப்படத்தின் இறுதிக்காட்சியாகும்.
இந்தத் திரைப்பட த்தின் அறிவிப்பு பிப்ரவரி 2018 இன் போது வெளியானது. இதனை அறிமுக இயக்குநர் பிரபு இயக்கவிருப்பதாகவும் இவர் இதற்கு முன்னர் பிரபு தேவாவின் உதவியாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் லால்குடி கருப்பையா காந்தியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜியை திரைப்பட தயாரிப்பாளர்கள் தீர்மானித்தனர், ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.[1] ஆர்.ஜே.பாலாஜியே கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார், அதே நேரத்தில் இரண்டு தொழில்நுட்ப எழுத்தாளர்களான எரா முருகன் மற்றும் பிரதீப் ரங்கநந்தன் ஆகியோர் வசனங்களை எழுதினர்.[2]
ஒலிப்பதிவினை லியோன் ஜேம்ஸ் மேர்கொண்டார். இந்தத் திரைப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன, அதில் ஐந்து பாடல்களை பா. விஜய் எழுதியுள்ளர், ஒரு பாடல் விக்னேஷ் சிவனால் எழுதப்பட்டது. ஆடியோ உரிமைகளை திங்க் மியூசிக் வாங்கியது. அனைத்து பாடல்களும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டன. மலைக்கள்ளான் திரைப்படத்தில் வந்த எத்தனை காலம் தான் ஏம்மற்றுவார் எனும் பாடலின் மீளுருவாக்கத்தினை லியோ ஜேம்ஸ் இதில் இடம்பெறச் செய்தார். இந்தப் பதிப்பை சீன் ரோல்டன் பாடினார்.[3] விக்னேஷ் சிவன் எழுதிய இரண்டாவது தனிப்பாடலான "திமிரு கட்டாதா டி" 2019 பிப்ரவரி 8 அன்று வெளியிடப்பட்டது. மூன்றாவது தனிப்பாடலான "தப்பாவா கிஜிச்சான்" ஸ்ருதி ஹாசன் பாடியது. இந்தப் பாடல் பா. விஜய் எழுதப்பட்டு, பிப்ரவரி 10, 2019 அன்று, இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான இறுதி டி 20 போட்டியின் போது வெளியிடப்பட்டது, இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழால் ஒளிபரப்பப்பட்டது. நான்காவது தனிப்பாடலான "தமிழ் ஆன்தம்" பாடலானது உலக தாய் தாய் நாள் அன்று 20 பிப்ரவரி 2019 அன்று வெளியிடப்பட்டது. இந்த பாடலை பா. விஜய் எழுதி சித் ஸ்ரீராம் மற்றும் சின்மாய் ஆகியோரால் பாடப்பட்டது, மூத்த கலைஞர்களான பி. சுஷீலா, எல்.ஆர் ஈஸ்வரி மற்றும் வாணி ஜெயராம் ஆகியோர் மற்ற இரண்டு பாடல்களான "இனி ஓரு விதி செய்வோம்" மற்றும் "தமிழ் தாய் வாழ்த்து" ஆகிய பாடல்கள் வெளியாகின. இந்தப் பாடல்கள் இயங்குதளங்களில் பிப்ரவரி 21, 2019 அன்று வெளியிடப்பட்டது.
ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழைவதைக் கூறி தெருச் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டது. இது சில சலசலப்புகளை ஏற்படுத்தியது.அதன் பிறகு இந்த படத்தின் அறிவிப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஒரு பிரத்யேக குழு துவக்க கட்டத்திலிருந்து வெளியீடு வரை படத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரங்களில் பணியாற்றியது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டமானது பிப்ரவரி 2, 2019 அன்று இளையராஜா 75 வாழ்த்து நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது, மேலும் 1 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் காட்சிகளைக் கடந்துவிட்டது (தற்போது 5.1 மில்லியன் காட்சிகளாக உள்ளன).[4][5] தமிழ் பதிப்பில் படத்தின் வெளியீட்டு உரிமைகள் சக்தி திரைப்பட தொழிற்சாலைக்கு விற்கப்பட்டன.[6] படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் சன் டிவியில் விற்கப்பட்டன. இப்படம் அதன் தொலைக்காட்சியில் 14 ஏப்ரல் 2019 அன்று, தமிழ் புத்தாண்டு தினத்துடன் காலை 11:00 மணிக்கு வெளியானது.