எல். வி. பிரசாத் | |
---|---|
![]() 2006இல் இந்திய அஞ்சல் அட்டை முத்திரையில் பிரசாத் | |
பிறப்பு | அக்கினேனி லட்சுமி வர பிரசாத் ராவ் 17 சனவரி 1908 சோமாவாரபாடு, ஏலூரு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 22 சூன் 1994 | (அகவை 86)
பணி | நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், தொழிலதிபர் |
செயற்பாட்டுக் காலம் | 1930–1990 |
பிள்ளைகள் | 2, ரமேஷ் பிரசாத் |
உறவினர்கள் | ஏ. ஸ்ரீகர் பிரசாத் (மருமகன்) |
எல். வி. பிரசாத் (L. V. Prasad) என்று பிரபலமாக அறியப்பட்ட லக்ஷ்மி வரப்பிரசாத ராவ் (17 ஜனவரி 1908 - 22 ஜூன் 1994) ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். மேலும், 1980இல், இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதாசாஹேப் பால்கே விருது பெற்றவர். ஆந்திரத் திரைப்படத்துறையில் அவரது பங்களிப்பிற்காக ரகுபதி வெங்கையா விருது வழங்கப்பட்டது. இவர் பிரசாத் குழுமத்தின் நிறுவனராவார். இதில் பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் பிரசாத் ஸ்டுடியோஸ், பிரசாத்ஸ் ஐமேக்ஸ் மற்றும் எல்.வி. பிரசாத் கண் நிறுவனம் ஆகியவை இதில் அடங்கும்.[1] 1980 ல் புது தில்லியில் நடைபெற்ற 27 வது தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவின் தலைவராக எல்.வி. பிரசாத் இருந்தார்.
அக்கினேனி லட்சுமி வர பிரசாத் ராவ் 1908 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள ஏலூரு வட்டத்தில் உள்ள சோமவாரப்பாடு என்ற ஒரு சிறிய கிராமத்தில் அக்கினேனி ஸ்ரீராமுலுக்கும் அக்கினேனி பசவம்மாவிற்கும் இரண்டாவது மகனாக பிறந்தார். இவரது குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தது, பிரசாத் மிகவும் செல்லமான வளர்க்கப்பட்டார், சிறு வயதில் புத்திசாலியாகவும், படிப்பில் ஆர்வமில்லாமலும் இருந்தார்.[2]
1924 ஆம் ஆண்டில் தனது 17 வது வயதில் அவர் தாய்வழி மாமாவின் மகள் சவுந்தர்யா மனோகரம்மாவை மணந்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தார். பிரசாத்தின் தந்தை பெருமளவில் கடன் வாங்கியதால், நொடித்துப் போனதாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார், அந்த சமயத்தில் பிரசாத் சினிமா வாழ்க்கையை ஈடுபட்டார். அவர் 1981 ஆம் ஆண்டு முதல் 3 ஜனவரி வரை 8 வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவின் அகில இந்திய தேர்வுக் குழுவின் தலைவராக இருந்தார்.[3]
பிரசாத் 1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிறுவர் திரைப்பட விழாவில் சர்வதேச ஜூரிகளில் தலைவராக இருந்தார். அவர் 1982-83 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 அக்டோபர் முதல் பிப்ரவரி 1987 வரை திரைப்படத் தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக இருந்தார். எல். வி. பிரசாத், திரைப்பட அரங்க உரிமையாளர்களின் தலைவராக இருந்தார். 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவரது நினைவை போற்றும் வகையில் அஞ்சல் அட்டை முத்திரை வெளியிட்டது.[4]
இந்தியத் திரைப்படத்துறையின் மூன்று வெவ்வேறு மொழிகளில் வெளியான முதல் பேசும் படங்களான ஆலம் ஆரா (இந்தி), பக்த பிரகலாதா (தெலுங்கு) மற்றும் காளிதாஸ் (தமிழ்) போன்ற படங்களில் பிரசாத் நடித்துள்ளார்.[5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)