![]() | |||
தனித் தகவல் | |||
---|---|---|---|
பிறப்பு | பெங்களூர், மைசூர் அரசு | 15 சூன் 1940||
இறப்பு | 26 ஏப்ரல் 2022 பெங்களுர், கருநாடகம், இந்தியா | (அகவை 81)||
மூத்தவர் காலம் | |||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) |
மைசூர் | |||
தேசிய அணி | |||
–1967 | இந்தியா |
எல்வேரா பிரிட்டோ (Elvera Britto) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைதடிப் பந்தாட்ட வீராங்கனையாவார். 1940 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய மகளிர் வளைதடிப் பந்தாட்ட அணிக்கும் மைசூர் மாநில அணிக்கும் தலைமை தாங்கிய ஒரு இந்திய வளைதடி பந்தாட்ட வீராங்கனையாக இவர் அறியப்படுகிறார். 1960 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக எட்டு தேசிய பட்டங்களை வென்ற மைசூர் அணியின் தலைவியாக எல்வேரா பிரிட்டோ இருந்தார். 1965 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ச்சுனா விருதைப் பெற்றார்.
கர்நாடக மாநில மகளிர் வளைதடிப் பந்தாட்ட சங்கத்தின் தலைவராகவும், தேசிய மகளிர் அணியின் தேர்வாளராகவும் பிரிட்டோ பணியாற்றினார்.
பிரிட்டோ 1940 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று இந்திய நகரமான பெங்களூரின் புறநகர்ப் பகுதியிலுள்ள குக் பகுதியில் ஓர் ஆங்கிலோ-இந்திய குடும்பத்தில் பிறந்தார்.[1][2] நான்கு சகோதரிகளில் இவரே மூத்தவர். இவர்களில் மூன்று பேர் தேசிய மகளிர் வளைதடி பந்தாட்ட அணியில் உறுப்பினராக நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினர். தனது இளமை பருவ நாட்களில், பிரிட்டோ துடுப்பாட்டம், நீச்சல் மற்றும் கால்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளில் பங்கேற்றார்.[2] பெங்களூரில் உள்ள புனித பிரான்சிசு சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் எல்வேரா பிரிட்டோ படித்தார்.[3]
எல்வேரா பிரிட்டோ தனது 13 ஆவது வயதில் வளைதடிப் பந்தாட்ட விளையாட்டை விளையாடத் தொடங்கினார், மேலும் மைசூர் மாநில மகளிர் வளைதடிப் பந்தாட்ட அணியின் தலைவியாகவும் ஆனார்.[1] 1960 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை அணியின் தலைவியாக விளையாடிய இவர், தொடர்ந்து எட்டு ஆண்டுகள் தேசிய பட்டங்களை வென்ற அணியை வழிநடத்தினார்.[4] இவரது சகோதரிகளான இரீட்டா மற்றும் மே ஆகியோருடன், பிரிட்டோ சகோதரிகளும் இந்திய தேசிய மற்றும் மைசூர் மாநில அணிகளில் ஒரு 'வலிமையான மூவர் ' என்று கருதப்பட்டனர்.[4] ஆத்திரேலியா, சப்பான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் இவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
1965 ஆம் ஆண்டில் இந்தியாவின் அர்ச்சுனா விருதை வென்றபோது, இந்த விருதைப் பெற்ற இரண்டாவது பெண்கள் வளைதடிப் பந்தாட்ட வீராங்கனை என்ற சிறப்புக்கு உரியவரானார்.[5]}}[4] இதற்கு முன்னர், 1961 ஆம் ஆண்டில் அதன் தொடக்க ஆண்டில் அன்னே லும்சுடன் இந்த விருதை வென்றார்[6] 1970 ஆம் ஆண்டுகளில் எல்வேரா பிரிட்டோ ஓய்வு பெற்ற பிறகு, ஒரு நிர்வாகியாக விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டார். எட்டு ஆண்டுகளில் இரண்டு முறை கர்நாடக மாநில மகளிர் வளைதடி பந்தாட்ட சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.[1] பிரிட்டோவின் தாயாரான லாட்டேசியாவும் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.[3] பிரிட்டோ 12 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியின் தேர்வாளராகவும் மேலாளராகவும் பணியாற்றினார்.[1] 1960 ஆம் ஆண்டுகளில் இந்திய மகளிர் வளைதடிப் பந்தாட்ட வீராங்கனையாக விளையாடிய இன்னல்களைக் குறிப்பிடுகையில், எல்வேரா பிரிட்டோவின் சகோதரி ரே, தாங்கள் மூன்றாம் வகுப்பு இரயில்களில் பயணம் செய்வார்கள் என்றும், தங்கள் உணவை சமைப்பார்கள் என்றும், ஒரு போட்டிக்கு முன்பு தங்கள் சீருடைகளை தைத்துக் கொள்வார்கள் என்பதை நினைவு கூர்கிறார்.[2] ஒரு நிர்வாகியாக, இவரது கவனம், தனது இருசக்கர வாகனத்தில் வந்து, வீரர்கள் கூட மைதானத்திற்கு வருவதற்கு முன்பே பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் வளைதடிப் பந்தாட்ட ஆர்வத்தை புதுப்பிப்பதாகக் கூறப்படுகிறது.[3]
எல்வேரா பிரிட்டோ 26 ஏப்ரல் 2022 அன்று பெங்களூரில் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 81.[4] தனது வாழ்நாளிலிவர் திருமணமாகாமலேயே இருந்தார்.[1]