எஸ். ஆர். ஜெயதுரை (பிறப்பு: 1969 மார்ச் 19) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர். இவர் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]
ஜெயதுரை 1969 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் உள்ள மங்காளபுரத்தில் பிறந்தார். இளங்கலை அறிவியல் (பி. எஸ். சி) பட்டதாரியான இவர், பாவ்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். 1999இல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். தற்போது சென்னையில் வசிக்கிறார்கள்.