எஸ். ஏ. சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆவார்.[1] இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 இல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இயக்குநராக அறிமுகமாகி பின்னர் சமூகப் பின்னணியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார்.[2]
சந்திரசேகர் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகில் முத்துப்பேட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார். அப்பா பெயர் சேனாதிபதிபிள்ளை அவர்களின் ராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் ரயில்வே பணிபுரிந்தார். ஒரு வசதி வாய்ந்த கிறித்தவ வேளாளர் பிள்ளை குடும்பத்தில் பிறந்தார்.
இவர் பின்னாளில் கர்நாடக இசைப் பாடகியான சோபாவை மணமுடித்துள்ளார்.[3]
இவர் கோலிவுட்டின் தற்போதைய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் அவர்களின் தந்தையாவார்.[4]
இவர் தான் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகனாக விஜயை ஒரு முழுமையான கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.
இவருக்கு நடிகர் விஜய்க்கு பிறகு இரண்டாவதாக வித்யா என்ற மகள் 2 வயதிலேயே உயிரிழந்தார்.[5]
சந்திரசேகர் அரசாங்க தகுதித் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று சென்னையில் அரசாங்க வேலையில் சேர்ந்தார்.
அவருக்கு திரைத்துறையில் தனது பங்களிப்பை செலுத்தும் விதமாக விஜயா வாஹினி ஸ்டூடியோவில் எம்ஜிஆர் நடித்து கொண்டிருந்த எங்க வீட்டு பிள்ளை திரைபடத்தின் மூலம் சவுண்ட் இன்ஜினியராக தனது திரை வாழ்வை ஆரம்பித்தார்.
அதன் பிறகு இயக்குநர் டி. என். பாலுவிடம் உதவி இயக்குநராக அவரது படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்.