எஸ். கே. சிவக்குமார் | |
---|---|
பிறப்பு | 1953 மைசூர், இந்தியா |
இறப்பு | 13 ஏப்ரல் 2019 (அகவை 66) பெங்களூர், இந்தியா |
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | விண்வெளித் தொலைத்தொடர்பு |
பணியிடங்கள் | இயக்குனர், இச்ரோ செயற்கைக்கோள் மையம் (ISAC), இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
கல்வி கற்ற இடங்கள் | தொழில்நுட்ப இளநிலை மற்றும் அறிவியல் முதுநிலைப் பட்டங்கள் (இந்திய அறிவியல் கழகம்), பெங்களூரு |
அறியப்படுவது | தொலை அளவியல் |
விருதுகள் | மைசூர் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம், கர்நாடக மாநில நாள் விருது பெற்றவர் |
எஸ். கே. சிவகுமார் (1953 – 13 ஏப்ரல் 2019) இந்திய அறிவியலாளரும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனரும் ஆவார். இந்தியாவின் ஆளில்லா நிலவு துழாவுகை திட்டமான சந்திரயான்-1 செயலாக்கத்திற்குத் தேவையான தொலை அளவியல் கருவி அமைப்புக்களின் மேம்படுத்தல்களில் முதன்மை பங்காற்றினார். கர்நாடக மாநிலத்தின் மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் இந்தியாவின் ஆழ் விண்வெளி தொலைத்தொடர்பின் தந்தை எனக் கருதப்படுகிறார்.[1][2][3]