௭ஸ். வி. வெங்கட்ராமன் | |
---|---|
இயற்பெயர் | வெங்கட்ராமன் |
பிறப்பு | 25 ஏப்ரல் 1911 |
பிறப்பிடம் | அய்யம்பாளையம், சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 7 ஏப்ரல் 1998 பாலவாக்கம், தமிழ்நாடு | (அகவை 86)
எஸ். வி. வெங்கட்ராமன் (25 ஏப்ரல் 1911 – 7 ஏப்ரல் 1998) தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராக விளங்கியவர். நடிகராகவும், பாடகராகவும் தமிழ்த் திரைப்படங்களில் தனது பங்களிப்பினைத் தந்தவர். இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.