எஸ்சிஐமகோ ஆய்விதழ் தரம் (SCImago Journal Rank)(எஸ். ஜே. ஆர்.) என்பது ஒரு பத்திரிகையால் பெறப்பட்ட மேற்கோள்களின் எண்ணிக்கை மற்றும் மேற்கோள்களினைச் செய்யும் பத்திரிகைகளின் முக்கியத்துவம் அல்லது மதிப்பு ஆகிய இரண்டிற்கும் காரணமான அறிவார்ந்த பத்திரிகைகளின் அறிவியல் செல்வாக்கின் அளவீடு ஆகும். ஒரு பத்திரிகையின் எஸ்.ஜே.ஆர் என்பது ஒரு எண் மதிப்பு ஆகும். இது முந்தைய மூன்று ஆண்டுகளில் அந்த பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக்கட்டுரை/வெளியீட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டில் பெறப்பட்ட சராசரி மேற்கோள்களின் எண்ணிக்கையின் மதிப்பினைக் குறிக்கிறது. எஸ்.ஜே.ஆர் அதிக மதிப்பானது அந்த பத்திரிகை அதிக மதிப்பினைக் கொண்டுள்ளது எனக் குறிக்கின்றது.
எஸ் ஜேஆர். சுட்டி என்பது பிணையக் கோட்பாட்டில் பயன்படுத்தப்படும் ஈஜென்வெக்டர் மைய அளவீட்டின் மாறுபாடாகும். இத்தகைய நடவடிக்கைகள் வலையமைப்பில் ஒரு முனையின் முக்கியத்துவத்தை அதிக மதிப்பெண் முனைகளுக்கான இணைப்புகள் முனையின் மதிப்பெண்ணுக்கு அதிக பங்களிப்பு செய்கின்றன என்ற கொள்கையின் அடிப்படையில் நிறுவுகின்றன. எஸ்ஜேஆர் காட்டி மிகப் பெரிய மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த பத்திரிகை மேற்கோள் வலையமைப்பில் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு அளவு-சுயாதீன காட்டி மற்றும் அதன் மதிப்புகள் பத்திரிகைகளை அவற்றின் "கட்டுரைக்குச் சராசரி மதிப்பு" மூலம் வரிசைப்படுத்துகிறது. இதனை அறிவியல் ஆய்விதழ் மதிப்பீட்டுச் செயல்முறைகளில் ஆய்விதழ்களின் ஒப்பீடுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். எஸ்ஜேஆர் காட்டி என்பது ஒரு இலவச ஆய்விதழ் பதின்மானமாகும். இது பேஜ் தரவரிசைக்கு ஒத்த ஒரு வழிமுறையைப் பயன்படுத்துகிறது.
எஸ்ஜேஆர் காட்டி என்பது 2 ஆண்டு காலப்பகுதியின் தாக்க காரணி (ஐ.எஃப்) அல்லது ஆவணத்தின் சராசரி மேற்கோள்களுக்கு மாற்றாக அமைகிறது. இது "ஒரு ஆவணத்திற்கான மேற்கோள்” (2y)" என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.[1][2]
அறிவியல் தாக்கம் மேற்கோள்களின் எண்ணிக்கையுடன் கருதப்பட்டால், ஆய்விதழ் பெறும் மேற்கோள்கள் வடிவில் தீர்மானிக்கப்படும்போது, ஒரு ஆய்விதழின் மதிப்பானது மேற்கோள்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றை வெளியிடும் ஆய்விதழின் மதிப்பு அல்லது முக்கியத்துவம் ஆகியவற்றின் கலவையாகப் புரிந்து கொள்ள முடியும். எஸ்ஜெஆர் காட்டி ஆய்விதழின் முக்கியத்துவத்தைப் பொறுத்து மேற்கோள்களுக்கு வெவ்வேறு மதிப்புகளை ஒதுக்குகின்றன. மிக முக்கியமான ஆய்விதழ்களிலிருந்து வரும் மேற்கோள்கள் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும், எனவே அவற்றைப் பெறும் ஆய்விதழ்களுக்கு அதிக மதிப்பினை வழங்கும். எஸ்ஜேஆர் குறிகாட்டியின் கணக்கீடு ஈஜென்ஃபாக்டர் மதிப்பெண்ணைப் போன்றது. முன்னது இசுகோபசு தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பின்னது அறிவியல் வலை தரவுத்தளத்தினைச் சார்ந்தது,[3] மேலும் பிற வேறுபாடுகள் உள்ளன.[4]
எஸ்ஜேஆர் காட்டி கணக்கீடு செயல்பாட்டு வழிமுறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு நிலையான தீர்வை அடையும் வரை பத்திரிகைகளில் தன்மதிப்புகளை விநியோகிக்கிறது. எஸ்ஜேஆர் வழிமுறை ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரே மாதிரியான தன்மதிப்பினை வழங்குவதன் மூலம் தொடங்குகிறது. பின்னர் செயல்பாட்டு வழிமுறை ஒன்றைப் பயன்படுத்தி, மறுபகிர்வு செய்யப்படுகிறது. இங்கு ஆய்விதழ்கள் தங்களது தன்மதிப்பினை ஒன்றுடன் ஒன்று மேற்கோள்கள் மூலம் மாற்றுகின்றன. தொடர்ச்சியான மறு செய்கைகளில் ஆய்விதழ் தன்மதிப்புகளுக்கு இடையிலான வேறுபாடு குறைந்தபட்ச தன்மதிப்பை எட்டாதபோது செயல்முறை முடிகிறது. இந்த செயல்முறை இரண்டு கட்டங்களாக உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆய்விதழுக்கும் பிரெஸ்டீஜ் எஸ்.ஜே.ஆர் (பி.எஸ்.ஜே.ஆர்) கணக்கீடு: முழு பத்திரிகை மதிப்பினையும் பிரதிபலிக்கும் அளவு சார்ந்த நடவடிக்கை, மற்றும் அளவு-சுயாதீனத்தை அடைய இந்த அளவை இயல்பாக்குதல் மதிப்பின், எஸ்.ஜே.ஆர் காட்டி.[5]