ஏ. ஆர். இராஜராஜ வர்மா

ஏ. ஆர். இராஜாராஜ வர்மா
ஏ. ஆர். இராஜாராஜ வர்மாவின் கையெழுத்துப் பிரதி

ஏ. ஆர். இராஜராஜ வர்மா (A. R. Raja Raja Varma) (மலையாளம்: എ.ആർ. രാജരാജവർമ്മ ) (1863-1918) ஓர் இந்தியக் கவிஞரும், இலக்கண நிபுணரும், திருவனந்தபுரத்தின் மகாராஜா கல்லூரியில் (தற்போதைய பல்கலைக்கழகக் கல்லூரி ) கிழக்கத்திய மொழிகளின் பேராசிரியருமாவார்.

இலக்கண நிபுணர் என்பதோடு மட்டுமல்லாமல், இவர் ஒரு பிரபல விமர்சகர், கவிஞர், கட்டுரையாளர், பல்கலைக்கழக ஆசிரியர், கல்வி சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில், மலையாள மொழியின் இலக்கணம், கவிதை, சொல்லாட்சிக்கான திட்டவட்டமான திட்டவட்டங்களை இவர் உருவாக்கினார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

ஏ.ஆர்.இராஜராஜ வர்மா மலப்புறம் மாவட்டத்தின் முந்தைய பரப்பநாட்டின் அரச குடும்பத்தின் ஒரு உறுப்பினராக இருந்தார். இவர், 1863 பிப்ரவரியில் சங்கனாச்சேரியிலுள்ள உள்ள இலட்சுமிபுரம் அரண்மனையின் கேரள வர்மா வல்லிய கோயி தம்புரானின் தாய்வழி சகோதரிரின் மகளானகுஞ்சிக்காவு தம்புராட்டிக்கும், கிடங்கூர் ஒனந்துருதி பாட்டியாலின் வீட்டில் வாசுதேவன் நம்பூதிரிக்கும் மகனாகப் பிறந்தார்.

பணிகள்

[தொகு]

வர்மா சமசுகிருதம் , மலையாளம் போன்ற மொழிகளில் பரவலாக எழுதினார். மலையாள இலக்கியத்தில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக கேரள பாணினி என்று அழைக்கப்படுகிறார். மலையாள இலக்கியத்தின் பொற்காலத்தில் கேரளாவில் ஏற்பட்ட சிறந்த இலக்கிய மறுமலர்ச்சியின் பின்னணியில் இவர் இருந்தார்.[1]

முக்கிய படைப்புகள்

[தொகு]

கேரள பாணினீயம், பாஷாபூஷனம், விரித மஞ்சரி, சாகித்ய சகாயம் போன்றவை இவரது முக்கியமான படைப்புகளாகும். இவற்றில் சாகித்ய் சகாயம் ஆங்கில பாணி நிறுத்தற்குறிகளை மலையாளத்திற்கு அறிமுகப்படுத்தியது.[2]

  1. "Archived copy". Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2010-08-27.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. George, K. M. (1972). Western Influence on Malayalam Language and Literature. சாகித்திய அகாதமி. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-0413-3.