அப்துல் காதர் | |
---|---|
கூட்டுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 2001–2004 | |
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1989–2001 | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2004 | |
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001–2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 30, 1936 |
இறப்பு | அக்டோபர் 3, 2015 கண்டி, இலங்கை | (அகவை 78)
தேசியம் | இலங்கைச் சோனகர் |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய தேசியக் கட்சி |
வேலை | வணிகர் |
ஏ. ஆர். எம். அப்துல் காதர் (30 அக்டோபர் 1936 - 3 அக்டோபர் 2015)[1] இலங்கை அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[2]
அப்துல் காதர் இலங்கையின் மலையகத்தில் கம்பளை உலப்பனை என்ற ஊரில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை நாவலப்பிட்டி சென் மேரிசு கல்லூரியில் கற்றார். அதன் பின்னர் வணிகத் தொழிலில் இறங்கினார்.[3]
தனது 20வது அகவையில் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் கம்பளை, நாவலப்பிட்டி, கலகெதரை தொகுதிகளின் மாவட்ட அமைப்பாளராக இருந்துள்ளர். கிராமசபை உறுப்பினராக இருந்த இவர் 1988 மாகாணசபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3]
1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] நகர அபிவிருத்தி துணை அமைச்சராக சிறிதுகாலம் பதவியில் இருந்தார்.[3] தொடர்ந்து 1994,[5] 2000, 2001, 2004[6], 2010[7] தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001 முதல் 2004 வரை ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் கூட்டுறவு அமைச்சராகப் பதவியில் இருந்தார்.[8]
2004 ஆகத்து மாதத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டு,[9] 2004 நவம்பரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.[10]
2010 மே மாதத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்தார். அவருக்கு மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் அக்குறணை தொகுதியின் அமைப்பாளர் பணியும் கொடுக்கப்பட்டது.[3]