ஏ. எம். ஏ. அசீஸ்

ஏ. எம். ஏ. அசீஸ்
A. M. A. Azeez
இலங்கை மூதவை உறுப்பினர்
பதவியில்
சூன் 1952 – மார்ச் 1963
முன்னையவர்முகம்மது மாக்கான் மாக்கார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1911-10-04)4 அக்டோபர் 1911
வண்ணார்பண்ணை, இலங்கை
இறப்பு24 நவம்பர் 1973(1973-11-24) (அகவை 62)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கைச் சோனகர்
முன்னாள் கல்லூரிஇலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி
தொழில்அரசு அதிகாரி
சமயம்முசுலிம்

ஏ. எம். ஏ. அசீஸ் (A. M. A Azeez), என அழைக்கப்பட்ட அபூபக்கர் முகம்மது அப்துல் அசீஸ் (Aboobucker Mohamed Abdul Azeez, அக்டோபர் 4, 1911 – நவம்பர் 24, 1973) இலங்கை கல்வியாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும், சமூக சேவையாளரும் ஆவார்.[1][2]

பிறப்பு, கல்வி

[தொகு]

அப்துல் அசீஸ் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில்[3] சுலைமான் முகைதீன் முகம்மது அபூபக்கர் என்பவருக்கும், மீராமுகைதீன் நாச்சியா என்பவருக்கும் பிறந்தார். தந்தை யாழ்ப்பாண நகரசபை உறுப்பினராக இருந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் அல்லாபிச்சை பள்ளி, யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.[3] 1929 இல் இலங்கைப் பல்கலைக்க்ழகக் கல்லூரியில் கற்று இளங்கலை சிறப்புப் பட்டம் பெற்றார்.[3] 1933 இல் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பைத் தொடருவதற்காக இங்கிலாந்து சென்றார். உயர் கல்வியைக் மேல் படிப்பைத் தொடர்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணமானார்.[3] உம்மு குல்தூம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மரீனா சுல்பிக்கா, முகம்மத் அலி, இக்பால் ஆகியோர் பிள்ளைகள் ஆவர்.

பணி

[தொகு]

அசீஸ் 1940 ஆம் ஆண்டில் இலங்கை நிருவாக சேவையில் சேர்ந்தார். கல்முனை, கண்டி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். 1948 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் அதிபராகப் பணியாற்றினார்.

1950 மற்றும் 1960களில் செனட் சபை உறுப்பினராகவும், பொது சேவை ஆணைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

சமூகப் பணிகள்

[தொகு]

1950 ஆம் ஆண்டில் அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கப் பேரவை (வை. எம். எம். ஏ) அமைப்பைத் தோற்றுவித்தார்.[3]

எழுதிய நூல்கள்

[தொகு]
  • இலங்கையில் இஸ்லாம்
  • அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்
  • மொழிபெயர்ப்புக் கலை
  • மிஸ்ரின் வசியம்
  • கிழக்காபிரிக்கக் காட்சிகள்
  • ஆபிரிக்க அனுபவங்கள்
  • தமிழ் யாத்திரை

மேற்கோள்கள்

[தொகு]
  1. Appreciation of A.M.A Azeez[தொடர்பிழந்த இணைப்பு] by A.G.A. Barrie, Daily Mirror (English)
  2. Dr. Azeez's contribution to eastern development by S.H.M. Jameel, Daily Mirror (English)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 காலித் எம். பாறூக் (5 அக்டோபர் 2014). "அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் ஸ்தாபகர்". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]