ஏ. எம். ரத்னம் | ||||
---|---|---|---|---|
பிறப்பு | ஹைதராபாத் , இந்தியா | |||
தொழில் | திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் | |||
பிள்ளைகள் | ஜோதி கிருஷ்ணா ரவி கிருஷ்ணா | |||
குறிப்பிடத்தக்க படங்கள் | இந்தியன் குஷி ரன் பாய்ஸ் தூள் கில்லி ஆரம்பம் | |||
|
ஏ. எம். ரத்னம் ஓர் இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் சிறீ சூர்யா மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரும் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்துள்ள இவர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.[1][2] இவருக்கு சொந்தமான சிறீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த, சினேகம் கொசம் உள்ளிட்ட மூன்று தெலுங்கு திரைப்படங்களும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.[3]
பின்னர் 1996இல் சங்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படமான இந்தியன் திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. பிறகு தமிழ்த் திரைப்படத்துறையில் மேலும் பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.[4] கேடி, பொன்னியின் செல்வன் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ரவி கிருஷ்ணா இவரது இளைய மகனாவார்.
எண் | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1991 | கர்த்தவ்யம் | தெலுங்கு | வெற்றி: விஜயசாந்தி - சிறந்த நடிகைக்கான தேசிய விருது |
1992 | பெட்டாரிகம் | தெலுங்கு | திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் |
1993 | ஆசாயம் | தெலுங்கு | |
1994 | தேஜஸ்வனி | தெலுங்கு | |
1994 | சங்கல்பம் | தெலுங்கு | இயக்கி |
1996 | இந்தியன் | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது– தமிழ் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் – சிறந்த தமிழ் திரைப்படம் பாரதியூடு என தெலுங்கில் மொழிகளில் |
1998 | நட்புக்காக | தமிழ் | |
1998 | எல்லாமே என் பொண்டாட்டிதான் | தமிழ் | |
1999 | சினேகம் கொசம் | தெலுங்கு | |
1999 | ஒக்கே ஒக்கடு | தெலுங்கு | முதல்வன் திரைப்படத்தின் மீளுருவாக்கம் |
1999 | காதலர் தினம் | தமிழ் | தில் கி தில் மேன் என இந்தியிலும், பிரேமிக்குல ரோஜு என தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது |
2000 | பிரியுராலு பிளிச்சின்டி | தெலுங்கு | |
2000 | குஷி | தமிழ் | |
2001 | குஷி | தெலுங்கு | |
2001 | நாயக் | இந்தி | |
2002 | ரன் | தமிழ் | |
2003 | எனக்கு 20 உனக்கு 18 | தமிழ் | |
2003 | நீ மனசு நாகு தெலுசி | தெலுங்கு | |
2004 | கோவில் | தமிழ் | |
2004 | தூள் | தமிழ் | |
2003 | நாகா | தெலுங்கு | திரைக்கதை ஆசிரியராகவும் |
2003 | பாய்ஸ் | தமிழ் | |
2004 | கில்லி | தமிழ் | |
2004 | 7ஜி ரெயின்போ காலனி | தமிழ் | |
2005 | சுக்ரன் | தமிழ் | |
2005 | பொன்னியின் செல்வன் | தமிழ் | |
2005 | சிவகாசி | தமிழ் | |
2006 | பங்காரம் | தெலுங்கு | |
2006 | கேடி | தமிழ் | |
2006 | தர்மபுரி | தமிழ் | |
2008 | பீமா | தமிழ் | |
2013 | ஆரம்பம் | தமிழ் | |
2015 | என்னை அறிந்தால் | தமிழ் | |
2016 | வேதாளம் | தமிழ் |