ஏ. எல். பசாம் என்ற ஆர்தர் லெவெலின் பசாம் (Arthur Llewellyn Basham) (24 மே 1914 – 27 சனவரி 1986) புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளரும், இந்தியவியல் அறிஞரும் ஆவார். பல வரலாற்று நூல்களை படைத்தவர். லண்டனில் உள்ள கீழை மற்றும் ஆப்பிரிக்கப் படிப்பு பள்ளியில், 1950களிலும், 1960களிலும் பேரராசிரியாக பணியாற்றியவர். இவரது இந்திய மாணவர்களில் ரூமிலா தாப்பர், ராம் சரண் சர்மா மற்றும் வி. எஸ். பதக் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆசீவகர்களின் வரலாறு மற்றும் தத்துவங்கள் குறித்து ஆய்வு செய்து 1950ல் முனைவர் பட்டம் பெற்றார். 1954ல் லண்டன் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்கப் படிப்புப் பள்ளியில் (SOAS) ரீடர் பதவியிலும், 1958ல் பேராசிரியர் பதவியிலும், 1965ல் வரலாற்றுத் துறைத் தலைவர் பதவியிலும் தரம் உயர்த்தப்பட்டார்.[1]
1979ல் பதவி ஓய்வு பெற்ற ஏ. எல். பசாம், உலகத்தின் பல பல்கலைகழகங்களில் வருகைப் பேராசிரியராகச் செயல்பட்டார்.
சுவாமி விவேகாநந்தரின் கொள்கைகளில் அதிக ஈர்ப்பு கொண்ட ஏ. எல். பசாம், 1986ல் கொல்கத்தாவில் மரணம் அடைந்தார்.
வின்சென்ட் ஆர்தர் சிமித் எழுதிய ஆக்சுபோர்டு இந்தியா வரலாறு நூலை, மோர்டிமெர் வீலருடன் இணைந்து ஏ. எல். பசாம் திருத்திய பதிப்பை வெளியிட்டார்.[3]
ஆய்வுக் கட்டுரைகள்
Basham, A. L. (October 1948). "Harṣa of Kashmir and the Iconoclast Ascetics". Bulletin of the School of Oriental and African Studies12 (3-4): 140–145. doi:10.1017/S0041977X00083269.
Basham, A. L. (February 1949). "Recent Work on the Indus Civilization". Bulletin of the School of Oriental and African Studies13 (01): 140. doi:10.1017/S0041977X00081891.
Basham, A.L. (1953). "A New Study of the Śaka-Kuṣāṇa Period". Bulletin of the School of Oriental and African Studies15: 80–97. doi:10.1017/s0041977x00087279.
Basham, A.L. (February 1957). "The Succession of the Line of Kaniṣka". Bulletin of the School of Oriental and African Studies20: 77. doi:10.1017/S0041977X00061693.
↑ 1.01.1Sachindra Kumar Maity, Professor A.L. Basham, My Guruji and Problems and Perspectives of Ancient Indian History and Culture, page 4, 1997, (Abhinav Publications: India)
↑Ballhatchet, Kenneth (October 1986). "A. L. Basham". Bulletin of the School of Oriental and African Studies49 (03): 561. doi:10.1017/S0041977X00045122.