ஏ.ஏ.கிருட்டிணசுவாமி அய்யங்கார் (A. A. Krishnaswami Ayyangar) (1892-1953) [1] இந்தியாவைச் சேர்ந்த ஒரு கணிதவியல் அறிஞர் ஆவார். இவர் கணிதப் படிப்பில் முதுகலைப் பட்டத்தை தன்னுடைய 18 ஆவது வயதில், பச்சையப்பன் கல்லூரியில் பெற்றார். இதைத் தொடர்ந்து அக்கல்லூரியிலேயே கணிதம் கற்பிக்கும் தொழிலைத் தொடங்கினார். 1918 இல் மைசூர் பல்கலைக்கழகத்தின் கணிதத்துறையில் பணியில் சேர்ந்த இவர் 1947 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். புகழ்பெற்ற ஏ.கே.இராமாநுசன் என்ற கன்னட மொழிப் புலவரின் தந்தையான இவர் 1953 ஆம் ஆண்டில் காலமானார்.
படிமுறைத் தீர்வுமுறையுடன் தொடர்பு கொண்ட ’சக்ரவள முறை’ என்ற தலைப்பில் அய்யங்கார் ஒரு கட்டுரையை எழுதினார். தொடரும் பின்னங்களிடமிருந்து இம்முறை எவ்வாறு வேறுபட்டது என்பதை இதன்மூலம் விளக்கினார். பியரே டி பெர்மா மற்றும் யோசப் லூயி லாக்ராஞ்சி [2] ஆகியோருக்கு சக்ரவள முறை இயல்பானது என்றும், இந்தியர்களுக்கு அம்முறையானது பரிசோதனை அளவிலானது என்றும் எண்ணிக்கொண்டிருந்த ஆண்ட்ரெ வெய்லி இவ்வேறுபாட்டைக் கருத்தில் கொள்ளாமல் இருந்ததை எடுத்துக் காட்டினார்.
லூசியானா மாநிலப் பல்கலைக்கழகப் பேராசியர் சுபாசு காக், அய்யங்காரின் வெளியீடுகள் யாவும் தனித்தன்மை மிக்கவையென முதன்முதலாக அறிவியல் சமூகத்திற்கு எடுத்துக்கூறினார் [3][4]
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link)