The star system AK Scorpii imaged by ALMA. The Binary star orbit was added for clarity. நன்றி: ALMA (ESO/NAOJ/NRAO), I. Czekala and G. Kennedy; NRAO/AUI/NSF, S. Dagnello | |
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Scorpius |
வல எழுச்சிக் கோணம் | 16h 54m 44.8498s[1] |
நடுவரை விலக்கம் | -36° 53′ 18.561″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 9.00 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F 5 IV-V[2] |
தோற்றப் பருமன் (G) | 9.2823 ± 0.0223[1] |
மாறுபடும் விண்மீன் | Herbig Ae/Be star[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | -1.97 ± 0.5[3] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −8.399±0.116[1] மிஆசெ/ஆண்டு Dec.: −29.268±0.083[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 7.1126 ± 0.0621[1] மிஆசெ |
தூரம் | 459 ± 4 ஒஆ (141 ± 1 பார்செக்) |
சுற்றுப்பாதை[3][4] | |
Primary | AK Scorpii A |
Companion | AK Scorpii B |
Period (P) | 13.609 ± 0.001 days |
Semi-major axis (a) | 0.16 au |
Eccentricity (e) | 0.47 ± 0.01 |
Inclination (i) | 115 ± 3° |
Longitude of the node (Ω) | 48 ± 3° |
Argument of periastron (ω) (secondary) | 186 ± 2° |
வீச்சு (இயற்பியல்) (K1) (primary) | 64.7 ± 0.9 km/s |
Semi-amplitude (K2) (secondary) | 65.5 ± 0.9 km/s |
விவரங்கள் [4] | |
AK Scorpii A | |
திணிவு | 1.25 M☉ |
AK Scorpii B | |
திணிவு | 1.25 M☉ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
ஏகே தேள்மீன் (AK Scorpii) என்பது எர்பிக் Ae/Be விண்மீனாகும் [2] .இந்த இரும விண்மீன் அமைப்பு விருச்சிகம் விண்மீன் தொகுப்பில் சுமார் 459 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது அருகிலுள்ள மேல் சென்டாரசு-உலூபசு விண்மீனை உருவாக்கும் பகுதிக்கு சொந்தமானது. மேலும் இந்த விண்மீன் அகந்திரள் பொருட்களை திரட்டிவருகிறது . [5] இது ஒரு சுற்று வட்ட இரும அமைப்பால் சூழப்பட்டுள்ளது, இது சிதறிய ஒளியில் VLT/ SPHERE , [6] ALMA ஆகியவற்றால் படமாக்கப்பட்டது. [4]
ஏகே தேள்மீன் சுமார் 18 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இது வானியல் கால அளவுகளில் இளமையாக உள்ளது. பைனரி முறையே M ☉ சமப் பொருண்மை கொண்ட இரண்டு விண்மீன்களைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் 13.6 நாட்கள் வட்டணைக் காலத்தில் சுற்றிவருகின்றன. இந்த இரும அமைப்பு சுமார் 30 வானியல் அலகுகள் ஆரம் கொண்ட ஒரு குறுகிய தூசி வளையத்தால் சூழப்பட்டுள்ளதுமிந்த இரும அமைப்புக்கும் தூசி வட்டுக்கும் இடையே உள்ள இடைவெளி சில வளிமத்தால் நிரப்பப்படுகிறது.
இது ஒரு மையப்பிறழ்வு வட்டணையில் உள்ளது, இது வட்டுடனான ஈர்ப்பு இடைவினைகளால் மாறுபடும் அகந்திரட்டல் விகிதங்களை ஏற்படுத்துகிறது. இதன் வட்டனையின் சேய்மைப் புள்ளியில், உள் வட்டு விளிம்பில் இருந்து பொருள் இடைவெளி ஊடாக இழுக்கப்படுகிறது. பைனரியின் ஒவ்வொரு உறுப்பையும் சுற்றி வளையம் போன்ற கட்டமைப்புகளை நிரப்பும் அகந்திரட்சி நீரோடைகளை இப்பொருள் உருவாக்குகிறது.[7] இதன் வட்டணையின் அண்மைப் புள்ளியில், வளையம் போன்ற கட்டமைப்புகள்ஈடைவினை புரிகின்றன, இது ஒரு கோண உந்த இழப்புக்கு வழிவகுக்கிறது., இதனால் ஒரு அகந்திரட்டல் வெடிப்பு ஏற்படுகிறது. [8]
2014 ஆம் ஆண்டு ஆகத்தில், அபுள் விண்வெளித் தொலைநோக்கி வழி வட்டணையின் சேய்மைநிலையின்போது இந்த அமைப்பு நோக்கப்பட்டது. அப்போது தொலைநோக்கி நீரகப் பாயத்தின் ஒரு துளியைக் நோக்கியது, இது விண்மீனை நோக்கி பாயும் வளிம ஓடையால் ஏற்படும் விண்மீன் ஒளிமறைப்பால் விளக்கப்படுகிறது. [9] வட்டணை அண்மைநிலையின்போது எக்சுஎம்எம்-நியூட்டன் தரவுகள் மேம்படுத்தப்பட்ட எக்சுக்கதிரும் புற ஊதாப் பாயமும் இந்த அமைப்பில் உள்ளதைக் காட்டுகிறது. இது வட்டணையின் அண்மைநிலையின்போது வலுவான அகந்திரட்சி நடப்பதற்கான கூடுதல் அறிகுறியாகும்.[8]
இரும விண்மீன் அமைப்பின் வட்டணைச் சாய்வும், சுற்று வட்ட வட்டின் சாய்வும் ஏறக்குறைய ஒத்திருக்கிறது. இந்த வட்டில் உருவாகக்கூடிய எந்தவொரு சுற்றுவட்டக் கோளும் இரும அமைப்பின் அதே தளத்தில் சுற்றும்.
விண்மீன்களின் கதிர்நிரல் அவற்றின் வளிமண்டலத்தில் இட்ரியம், பேரியம், இலாந்தனம் ஆகிய வேதியியல் தனிமங்கள் செறிந்து இருப்பதைக் காட்டுகிறது. முதன்மை விண்மீன் கூடுதலாக சிர்கோனியத்தின் கூடுதலான செறிவைக் காட்டுகிறது மேலும், இரண்டாம் நிலை விண்மீனில் கந்தகம் செறிவாக உள்ளது. [2]