டாக்டர் ஏசு ரௌசல் (Dr. Aage Rousell) டேனிசு கட்டிடக் கலைஞர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார். இவர் 1901 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியன்று கோபன்கேகனில் பிறந்தார். 1972 ஆம் ஆண்டு சூன் மாதம் 09 ஆம் தேதியன்று ப்ரெடெரிக்சுபெர்க் என்னும் இடத்தில் உயிர் நீத்தார். [1] 1920 ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை கிரீன்லாந்தில் தொல்பொருள் ஆராய்ச்சிக்காக குறிப்பாக இடைக்கால கிரீன்லாந்தில் நார்சு குடியேற்றங்கள் குறித்த இவரது பணிக்காக மிகவும் பிரபலமானார்.
ரூசல் ருடால்ப் கிறிசுடியன் ரூசல் (Rudolf Christian Roussell) (1859-1933) மற்றும் மனைவி சிட்சே கன்சின் நீல்சன் (Sidse Hansine Nielsen) (1868-1941) ஆகியோரின் மகன் ஆவார். ரூசல் 1919 ஆம் ஆண்டு ஆர்ட்ரப்பில் உள்ள சாங்க்ட் ஆண்ட்ரியாசு கொலேசியத்தில் மாணவரானார். 1920 ஆம் ஆண்டு கோபனாவன் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் பட்டம் பெற்றார். இவர் ராயல் டேனிசு அகாடமி ஆப் பைன் ஆர்ட்சில் பயின்று 1922 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.
1926 ஆம் ஆண்டு, 1930 ஆம் ஆண்டு, 1932 ஆம் ஆண்டு, 1934 ஆம் ஆண்டு, 1935 ஆம் ஆண்டு மற்றும் 1937 ஆம் ஆண்டுகளில் தொல்லியல் தொடர்பாக கிரீன்லாந்து பயணங்களிலும், 1939 ஆம் ஆண்டு ஐசுலாந்திற்கான பயணத்திலும் ரூசல் பங்கேற்றார். 1926 ஆம் ஆண்டில், கலாச்சார வரலாற்றாசிரியர் பவுல் நார்லண்ட் (1888-1951) உடன் இணைந்து ரூசல் தெற்கு கிரீன்லாந்தில் உள்ள இகாலிகுவில் 13 எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்தார்.[2]
1932 ஆம் ஆண்டில், மேற்கு கிரீன்லாந்தின் கடற்கரையில் வைக்கிங் வயது தளங்களை அகழ்வாராய்ச்சி செய்வதற்கான தொல்பொருள் தோண்டலில் ஈகில் நத் (1903-1996) உடன் கிரீன்லாந்து திரும்பினார். 1934 ஆம் ஆண்டு கோடையில் ரூசல், குனூத் மற்றும் நார்லண்ட் ஆகியோர் இகாலிகுவில் பழைய நோர்சு இடிபாடுகளை மீண்டும் தோண்டி எடுத்தனர். 1937 ஆம் ஆண்டு கோடையில் போலந்து நாட்டில் உள்ள நூக் மாவட்ட பயணத்துடன் இவர் கிரீன்லாந்து திரும்பினார்.[3] [4]
1937 ஆம் ஆண்டு டென்மார்க்கின் தேசிய அருங்காட்சியகத்தில் அருங்காட்சியக ஆய்வாளராக ஆன ரூசல், 1949 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை இடைக்கால சேகரிப்பின் தலைமை ஆய்வாளராகவும் தலைவராகவும் இருந்தார். [5] இவர் கிரீன்லாந்தின் இடைக்கால நார்சு செட்டில்மென்ட்டில் பண்ணைகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட படைப்புகளை 1941 ஆம் ஆண்டு எழுதினார். [6] பின்னர் இவர் ஆர்க்டிக் கலைக்களஞ்சியத்தில் பங்களிப்பாளராக இருந்தார். [7]
டென்மார்க்கின் சேர்மன் ஆக்கிரமிப்பின் போது, ரோசல் எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். இதன் விளைவாக, 1957 ஆம் ஆண்டு இவர் புதிதாக நிறுவப்பட்ட டென்மார்க்கின் விடுதலை அருங்காட்சியகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். [1]