ஏஞ்சலா கோம்சு Angela Gomes | |
---|---|
பிறப்பு | சூலை 16, 1952 டாக்கா, கிழக்கு வங்காளம், பாக்கித்தான் பகுதி |
விருதுகள் | ரமோன் மக்சேசே விருது (1999) |
ஏஞ்சலா கோம்சு (Angela Gomes)(பிறப்பு சூலை 16, 1952)[1] என்பவர் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். இவர் 1976ஆம் ஆண்டு முதல் தன்னார்வ தொண்டு நிறுவனமான பன்ச்டே ஷேகாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.[1] இவரின் சமூகத் தலைமைக்காக 1999-ல் ரமோன் மகசேசே விருதை வென்றார்.[2]
இவர் எழுதிய புத்தகங்களில் "பெரியவர்களுக்கான படைப்புகள் மூலம் கற்றல்", "உரிமைகளுடன் வாழ்வது", "குழந்தைகளின் எளிதான வாழ்க்கை" மற்றும் "நான் எப்படி அடைந்தேன்" ஆகியவை அடங்கும்.[1]