மனிதர்கள் உடலில் உள்ள அடினைலைல் சைக்லேஸ் வகை 1 நொதிக்கு ஏடீசிஒய்1 (ADCY1) மரபணு என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது .[1][2]
இந்த மரபணு மூளையில் உள்ள அடினைலைல் சைக்லேஸ் ஒரு மரபணு வடிவவகை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது . மூளை உருவாக்கத்தை வகைப்படுத்தும் முறையில் இதே போன்ற ஒரு புரதம் எலிகளின் உடலில் இருப்பது கண்டறியப்பட்டது.
ஏடீசிஒய் 1 என்பது கால்மோடுலின் உணர் அடினைலைல் சைக்லேஸ் ஆகும். மத்திய நரம்பு மண்டல செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் அடிப்படைச் செயல்பாட்டில் தொடர்பு பெற்றுள்ளது. குறிப்பாக, நினைவக கையகப்படுத்தல் மற்றும் கற்றல் ஆகியவற்றில் இது பெரும் பங்கு வகிக்கிறது, பீட்டா மற்றும் காமா போன்ற சிக்கலான துணை அலகுகளின் செயல்குறைப்பியாக ஜி புரதம் செயல்படுகிறது.[3]