ஏபிசு மெலிபெரா சிசிலியானா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கைமினாப்பிடிரா
|
குடும்பம்: | ஏபிடே
|
பேரினம்: | |
இனம்: | ஏ. மெலிபெரா
|
துணையினம்: | சிசிலியானா
|
முச்சொற் பெயரீடு | |
ஏபிசு மெலிபெரா சிசிலியானா | |
வேறு பெயர்கள் [1] | |
|
ஏபிசு மெலிபெரா சிசிலியானா (Apis mellifera siciliana) என்பது சிசிலியன் தேனீ எனப் பொதுவான பெயரால் அறியப்படுகிறது. இது மத்தியதரைக்கடலில் உள்ள இத்தாலியின் சிசிலி தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது ஆப்பிரிக்கத் தேனீக்களின் வம்சாவளியைச் சேர்ந்தது. ஏபிசு மெலிபெரா சகாரியென்சிசு, ஏபிசு மெலிபெரா இண்டர்மிசா மற்றும் ஏபிசு மெலிபெரா ருட்னெரி ஆகியவற்றுடன் நெருங்கிய மரபு உறவுகளைக் கொண்டுள்ளது.[2]
2014-ல் டி. என். ஏ. பகுப்பாய்வின்படி 39.1% தீவுகளின் தேனீக்கள் எம். வழிமுறையினை (பெரும்பாலும் ஏபிசு மெலிபெரா மெலிபெரா) மற்றும் சி. வழிமுறை (பெரும்பாலும் ஏபிசு மெலிபெரா லிகுசுடிகா, ஏபிசு மெலிபெரா கார்னிகா அல்லது பக்பாசுட் தேனீ) ஆகியவற்றிலிருந்து டி. என். ஏ. உள்வாங்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வல்கானோ மற்றும் பிலிகுடி தீவுகளில் ஏ. மெ. சிசிலியானா டி. என். ஏ. உட்செலுத்தலின் அறிகுறிகளைக் காட்டவில்லை. துணையினங்களின் மரபுப் பண்புகளைப் பாதுகாப்பதிலும் இவற்றின் செயல்திறனை வெளிப்படுத்தியது.[3]