ஏமா பாராலி Hema Bharali | |
---|---|
![]() 2006 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் ஏமா பாராலி பேசுகிறார். 6 | |
பிறப்பு | அசாம் மாகாணம், பிரித்தானிய இந்தியா | பெப்ரவரி 19, 1919
இறப்பு | ஏப்ரல் 29, 2020 அசாம், இந்தியா | (அகவை 101)
கல்லறை | மும்பை |
பணி | சமுகப் பணியாளர் சுதந்திரப் போராட்ட வீரர் காந்தியவாதி சர்வோதயம் தலைவர் |
செயற்பாட்டுக் காலம் | 1950 – 2020 |
விருதுகள் | பத்மசிறீ தேசிய வகுப்புவாத நல்லிணக்க விருது பக்ருதின் அலி அகமது Memorial Award |
ஏமா பாராலி (Hema Bharali) (19 பிப்ரவரி 1919-29 ஏப்ரல் 2020) என்பவர் ஓர் இந்திய சுதந்தர ஆர்வலர், சர்வோதய இயக்கத் தலைவர் மற்றும் காந்தியவாதி ஆவார். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்களின் முன்னேற்றத்திற்காகவும் இவர் பெரும் பாடுபட்டார்.[1] 1950 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்திலுள்ள வடக்கு லக்கீம்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கான நிவாரண பணியிலும் சீன இந்தியப் போரிற்கு பின்னர் எடுக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களிலும் இவர் தீவிரமாக செயல்பட்டார்.[2] இந்தியாவின் நான்காம் உயரிய குடியியல் விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு 2005ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது.[3] ஓராண்டிற்குப் பிறகு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மதநல்லிணக்க குழு இவருக்கு தேசிய மத நல்லிணக்க விருது வழங்கியது.[4]
ஏமா பாராலி வட கிழக்கு இந்திய மாநிலமான அசாமில் 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி சுதியா என்னும் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலிருந்தே இவர் சமூக சேவை செய்து வந்தார். மற்றும் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். 1950 இல் வடக்கு லக்கீம்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கான நிவாரணப் பணிகளிலும் இவர் தீவிரமாக செயல்பட்டார்..[2][2][5] 1951இல் வினோபா பாவேவால் ஆரம்பிக்கப்பட்ட நிலக்கொடை இயக்கத்தில் இணைந்து பிறகு அந்த இயக்கத்தின் தலைவராகவே ஆனார்.[6] வினோபா பாவேவால் உருவாக்கப்பட்ட குழுவில் கலந்து கொண்டு தேசுபூரின் யுத்தப் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். அப்போது வினோபா பாவேவால் ஆரம்பிக்கப்பட்ட மைத்ரேயி ஆசிரமத்திலும் தங்கினார்.[7] நிலக்கொடை இயக்கம் சம்பந்தப்பட்ட நடை பயணங்களிலும் கலந்து கொண்டார். மற்றும் மத்திய சமூக நல வாரியத்தின் நிர்வாக சபையை உருவாக்கியவரும் இவரே.[8]
நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மசிறீ விருதை 2005 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று பெறுபவர் பட்டியலில் இவரையும் இந்திய அரசு இணைத்துக்கொண்டது.[3] 2006 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நல்லிணக்க குழு இவருக்கு தேசிய மத நல்லிணக்க விருது வழங்கி சிறப்பித்தது.[4] மூன்று வருடங்களுக்குப் பிறகு, தேசிய ஒருமைப்பாட்டிற்காக பக்ருதின் அலி அகமது விருது அசாம் அரசு இவருக்கு வழங்கியது.[9] திருமணமாகாத ஏமா பாராலி 90களில் பொருளாதார நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தது.[10][11] அப்பொழுது மாநில அரசு அவருக்கு நிதி உதவி செய்தது. அவர் அசாம் மாநிலத்தின் குவகாத்தியில் வசித்தார்.Assam.[12] ஏப்ரல் 2016ஆம் ஆண்டு அவர் மீண்டும் சமூக சேவை செய்ய தொடங்கினார்.[13]
அவர் 29 ஏப்ரல் 2020 தனது 101 ஆவது அகவையில் மறைந்தார்.[14]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)