ஏரியசு ஜெல்லா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | அரிடே
|
பேரினம்: | ஏரியசு
|
இனம்: | ஏ. ஜெல்லா
|
இருசொற் பெயரீடு | |
ஏரியசு ஜெல்லா டே, 1877 | |
வேறு பெயர்கள் | |
|
ஏரியசு ஜெல்லா (Arius jella) என்பது பொதுவாகக் கருப்பு துடுப்பு கடல் கெளிறு என்று அழைக்கப்படுகிறது. இது சைலூரிபார்மிசு வரிசையில் உள்ள கடல் கெளிறு மீன் சிற்றினமாகும்.[1][2]
இது இந்தியாவிற்கு அப்பால் உள்ள கடல்கள் உட்பட இந்தியப் பெருங்கடலைத் தாயகமாகக் கொண்டது. ஏ. ஜெல்லா 30 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. இதன் எடை சுமார் 500 கிராம் வரை இருக்கும்.[3] இது பெரும்பாலும் கடலோரம், முகத்துவாரங்கள் மற்றும் ஆறுகளில் அலை காணப்படும் பகுதிகளில் காணப்படுகிறது. இது முதுகெலும்பில்லாத உயிரினங்களையும் சிறு மீன்களையும் உணவாகக் கொள்கிறது.[4]