ஏர் மார்சல் எச்.சி.திவான் | |
---|---|
பிறப்பு | 20-09-1921 |
இறப்பு | 22-08-2017 |
சார்பு | ![]() ![]() |
சேவை/ | அரச இந்திய விமானப்படை இந்திய வான்படை |
போர்கள்/யுத்தங்கள் | பர்மா பிரச்சாரம் |
ஏர் மார்சல் அரி சந்த் திவான் (Hari Chand Dewan) (20 செப்டம்பர் 1921–22 ஆகசுடு 2017) ஒரு இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிசுதான் போரில் கிழக்கு விமானப்படையின் தலைவராக பணியாற்றியதற்காக அவருக்கு 1972 ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[1]
அரி சந்த் திவான் 20 செப்டம்பர் 1921 ஆம் ஆண்டு பிறந்தார்.[2] 1940 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்குப் பணியமர்த்தப்பட்ட 24 இந்திய விமானிகளில் இவரும் ஒருவர்.[3] 1969 ஆம் ஆண்டு பரம் விசிட்ட சேவா பதக்கம் பெற்றார்.[4] 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிசுதான் போரில் கிழக்கு விமானப்படையின் தலைவராக இருந்தார்.[5]
திவான் 2017 ஆம் ஆண்டு ஆகசுடு மாதம் 22 ஆம் தேதி தனது 95 வயதில் இறந்தார்.[2]