ஏலேசுவரம்

ஏலேசுவரம்
Yeleswaram
ఏలేశ్వరం
நகரம் (நகராட்சி)
ஏலேசுவரத்தில் ஏலேறு அணை
ஏலேசுவரத்தில் ஏலேறு அணை
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிழக்கு கோதாவரி
தாலுகாகள்ஏலேசுவரம்
பரப்பளவு
 • மொத்தம்6.50 km2 (2.51 sq mi)
ஏற்றம்
60 m (200 ft)
மொழிகள்
 • அலுவலபூர்வம்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எ
533429
தொலைபேசிக் குறியீடு+91-8868

ஏலேசுவரம் அல்லது எலிசுவரம் {Yeleswaram or Elesvaram) என்பது ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒர் நகரம் மற்றும் மண்டலம் ஆகும்[2]. விடுதலைப்போராட்ட வீரரும் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான சந்தாகா அப்பாராவ் இந்நகரத்தைச் சார்ந்தவர் ஆவார்.

ஏலேசுவரம் நீர்மின் திட்ட தளத்திற்கு அருகில் ஏலேறு நதி

புவியியல்

[தொகு]

ஏலேசுவரம் 17.2833°வடக்கு 82.1000°கிழக்கு[3] என்ற ஆள்கூறு அடையாளங்களில் பரவியுள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 60 மீட்டர்கள் அல்லது 200 அடி உயரத்தில் இந்நகரம் இருக்கிறது.

பள்ளிகள்

[தொகு]

ஏலேசுவரத்தில் சுமார் இருபது பள்ளிகள் உள்ளன. நரேன் மாதிரி பள்ளி, ஆக்சிலியம். ஆங்கில வழி உயர்நிலை பள்ளி, நவசோதி பள்ளி, பாசியம் பொதுப் பள்ளி, ஏலேசுவரம் பொதுப்பள்ளி, சிறீவித்யா திறன் பள்ளி, ஏ.எம்.சி. உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் அரசினர் உயர்நிலைப் பள்ளி முதலியன அவற்றில் சிலவாகும்.

சிறப்பியல்புகள்

[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஏலேசுவரம் நகரில் 1.5x3 (4.5 மெகாவாட்டு) திறன்மிக்க ஒரு சிறிய நீர் மின் திட்டத்தை இந்தியாவின் மணியம்சா மின்னுற்பத்தி திட்ட வரையறுக்கப்பட்ட நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. 2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 48,000 ஆகும். ராசமுந்திரியில் இருந்து 56 கிமீ தொலைவிலும் ஏர்ராவரத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலும் இந்நகரம் அமைந்துள்ளது. விசாகப்பட்டிணம் இரும்பு எஃகு தொழிற்சாலைத் திட்டத்திற்குச் செல்லும் ஒரு பெரிய குழாய் வரிசை 2004 ஆம் ஆண்டில் இங்கிருந்து ஏலிரு கால்வாயுடன் இணைக்கப்பட்டது. மிகச்சிறந்த ஒரு நகரமாக ஏலேசுவரம் தயாராகிவருகிறது.

பஞ்சாயத்துகள்

[தொகு]

ஏலேசுவரம் மண்டலத்தில் பின் வரும் பஞ்சாயத்துகள் இடம்பெற்றுள்ளன.

  • இலிங்கம்பர்த்தி
  • பத்ராவரம்
  • பேராவரம்
  • பேதா சங்கர்லபுடி
  • திருமாலி

பார்ப்பதற்கு ஒரு அழகான இடமாக இந்நகரம் இருக்கிறது. ஆர். நாரயணமூர்த்தி தன்னுடைய பல திரைப்படங்களில் இவ்விடத்தைப் படம்பிடித்து காட்டியுள்ளார். ஏலேறு நீர்த்தேக்கமும் இந்நகரத்தில் அமைந்துள்ளது. மேலும், ஏலேசுவரத்திற்கு 30 கிலோமீட்டர் தொலைவில் பின்சார கொண்ட என்ற அழகிய சுற்றுலா தலமும் இருக்கிறது.

சுற்றுலா

[தொகு]

ஏலேறு நீர்த்தேக்கம், ஏலேறு கால்வாய், சிவாலாயம் முதலிய அழகிடங்கள் இருப்பதால் இங்கு பழைய தெலுங்கு திரைபடங்களின் படப்பிடிப்பு நிகழ்ந்துள்ளது. இங்குள்ள மலையின் மேல் ஒரு சாய்பாபா கோயில் இருக்கிறது.(பெரும்பாலும் உள்ளூர் மக்கள் இக்கோயிலை சாய்பாபா மெட்டா என்று அழைக்கின்றனர். மலையின் மறுபுறத்தில் ஏலேறு கால்வாய் பாய்ந்து செல்வதைப் பார்ப்பது கண்ணுக்கினிய ஒரு அழகான காட்சியாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 28 January 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "List of Sub-Districts". Census of India. பார்க்கப்பட்ட நாள் 2007-05-18.
  3. Elesvaram at Falling Rain Genomics