ஏழை படும் பாடு | |
---|---|
1951 சனவரி "பேசும் படம்" விளம்பரம் | |
இயக்கம் | கே. ராம்நாத் |
தயாரிப்பு | பட்சிராஜா ஸ்டுடியோஸ் |
மூலக்கதை | Les Misérables படைத்தவர் விக்டர் ஹியூகோ --> |
திரைக்கதை | இளங்கோவன் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | சித்தூர் வி. நாகையா ஜாவர் சீதாராமன் எம். என். ராஜம் டி. எஸ். பாலையா செருகளத்தூர் சாமா பத்மினி வி. கோபாலகிருஷ்ணன் லலிதா டி. எஸ். துரைராஜ் குமாரி என். ராஜம் |
ஒளிப்பதிவு | என். பிரகாஷ் |
படத்தொகுப்பு | சூர்யா |
வெளியீடு | 6 நவம்பர் 1950[1] |
ஓட்டம் | 197 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஏழை படும் பாடு (Ezhai Padum Padu) 1950 ஆம் ஆண்டு தீபாவளி நாளன்று வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் ஜாவர் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததனால் சீதாராமன் ஜாவர் சீதாராமன் என அழைக்கப்படலானார்.[2][3][4][5] (அப்பெயர் பின்னர் ஜாவர் சீதாராமன் என மருவியது)
சிறையிலிருந்து தப்பியோடிய கந்தன் என்ற ஒரு குற்றவாளியை கண்டிப்பானவரும் கருணையற்றவருமான இன்ஸ்பெக்டர் ஜாவட் மீண்டும் கைது செய்கிறார். ஒரு கிறீஸ்தவ பேராயரினால் கந்தன் வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயம் தொடங்குகிறது. விடுதலையான கந்தன் ஒரு கண்ணாடித் தொழிற்சாலை ஆரம்பிக்கிறான். தனது ஆளடையாளத்தை மாற்றிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். அவன் வாழும் நகரத்தின் முதல்வர் ஆகிறான். இன்ஸ்பெக்டர் ஜாவட் அவனை அடையாளம் கண்டுகொண்டு அவனது பழைய வாழ்க்கையை வெளிப்படுத்தப் போவதாக பயமுறுத்துகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் கந்தன் ஜாவட்டின் உயிரைக் காப்பாற்றுகிறான். கந்தனுக்கு நன்றிக் கடன் பட்ட ஜாவட் கந்தன் பற்றி மேலிடத்துக்கு அறிவிக்க விரும்பாமல் தானே தற்கொலை செய்துகொள்கிறார்.
இத்திரைப்படத்தை எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு தமது பட்சிராஜா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாகத் தயாரித்தார். பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோ எழுதிய லேஸ் மிசராபிள்ஸ் என்ற கதையைத் தழுவி சுத்தானந்த பாரதியார் ஒரு நாவல் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் இத்திரைப்படக் கதை அமைந்தது.
தொடக்கத்தில் பேராயராக நடிக்க நாகர்கோவில் கே. மகாதேவன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ ராமுலு நாயுடு அவரை மாற்றி அந்தப் பாத்திரத்தில் செருகளத்தூர் சாமாவை நடிக்க வைத்தார். ஸ்ரீ ராமுலு நாயுடு கண்டிப்புக்கும், நேரந்தவறாமைக்கும் பெயர் பெற்றவர். ஒரு நாள் படப்பிடிப்புக்கு இயக்குநர் ராம்நாத் வரவில்லை. அதனால் நடிகர் கோபாலகிருஷ்ணன் அன்றைக்குப் படப்பிடிப்பு இருக்காது என எண்ணி சென்றுவிட்டார். ஆனால் ஸ்ரீ ராமுலு நாயுடு நடிகை ராகினிக்கு ஆண் வேடம் போட்டு அன்றைய படப்பிடிப்பை நடத்திவிட்டார்.
இத்திரைப்படம் பீதல பாட்லு என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டது.[2]
ஏழை படும் பாடு, 1950 ஆம் ஆண்டு தீபாவளி நாளன்று சென்னை காஸினோ திரையரங்கில் வெளியானது. வியாபார ரீதியாகவும், விமர்சகர் பார்வையிலும் இது வெற்றிப் படமாக அமைந்தது.[2]
இத் திரைப்படத்துக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்தார். கண்ணன் மன நிலையை என்ற பாரதியார் பாடல் படத்தில் இடம்பெற்றது. ஏனைய பாடல்களை எழுதியவர் கோபாலகிருஷ்ணன் திரைப்படத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றன. பாடகர்: சித்தூர் வி. நாகையா. பின்னணிப்பாடகர்கள்: திருச்சி லோகநாதன், எம். எல். வசந்தகுமாரி, பி. ஏ. பெரியநாயகி & ராதா ஜெயலட்சுமி ஆகியோர்.
வரிசை எண். |
பாடல் | பாடியவர்/கள் | கால அளவு (நி:செ) |
1 | யௌவனமே ஆஹா யௌவனமே | எம். எல். வசந்தகுமாரி | 02.19 |
2 | ஓ கிளியே ஆசைக் கிளியே | பி. ஏ. பெரியநாயகி | 01.21 |
3 | வானமுதே ஒன்றாய் | திருச்சி லோகநாதன், எம். எல். வசந்தகுமாரி & பி. ஏ. பெரியநாயகி |
05.28 |
4 | கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம் | எம். எல். வசந்தகுமாரி | 03.25 |
5 | கனிவுடன் திரும்பியே பாரும் | பி. ஏ. பெரியநாயகி | 03.12 |
6 | என்னாசை பாப்பா | சித்தூர் வி. நாகையா | 01.54 |
7 | விதியின் விளைவால் அனாதை ஆனேன் | ராதா ஜெயலட்சுமி | 03.13 |
8 | வாழ்வு மலர்ந்ததுவே | சித்தூர் வி. நாகையா | 03.08 |
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)